S.Raguram

சிவசுப்பிரமணியம் ரகுராம் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கையியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இவர் தொடர்பியல் கல்வியை தமது சிறப்புத் துறையாகத் தேர்வு செய்து ஆய்வுகளை மேற்கொள்பவர். இத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடர்பாடல் கற்கைகள் சமூகவியல், பண்பாட்டியல், கலைகள், உளவியல், மொழியியல், அரங்கியல், நாட்டார் வழக்காற்றியல், அரசியற் பொருளியல் முதலான பல்துறை அறிவுப் புலங்களுடன் ஊடாட்டம் கொண்டது. இந்த அறிகை மரபின் பன்முக ஆய்வு இணைப்பாக்கப் பின்புலத்தில் உயிர்ப்புடன் இயங்குபவர்.

எஸ்.ரகுராம் புத்தகங்கள்
2015 - பொருளியல் - அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி...