Muthuthtampippillai, A (1852 - 1917)

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  à®šà®°à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯ˆ அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  à®µà®¨à¯à®¤ பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாதானமாகி யாழ்பாணத்தரசர் தமது நாட்டை பறங்கிக்காரர் காலத்திலுங் கைவிடாது நூறுவருஷம் ஆண்டார்களென்பது உண்மை. பறங்கிகாரரோடு பொருது நிருவகிக்கவாற்றாத சிங்களவரசர் சிலர் யாழ்பாணத்தரசரிடம் அடைக்கலம் புகுந்தார்கள் என்பது இலங்கை சரித்திரத்தாற் றுணியக்கிடத்தலின், பறங்கிக்காரர் காலத்தும்யாழ்பாணம் வலிய அரசுடையதாயிருததென்பது திண்ணம். 
இத்துணைச் சிறந்த யாழ்பாணவரசு இற்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் ( 161 B.C) அரசு செய்த ஏலேலன் காலத்திலே தொடங்கியது. இடையிடையே அரசின்றி சிலகாலமும் வழிவழியரசோடு நெடுங்காலமும், பின்னருமிடையிடையே சிங்களவரசு சிலகாலமும், பின்னரும்தமிழரசு வழிமுறையாகச் சிலகாலமுமாக 1700 வருஷம் சுவதேசவரசு  à®¨à®Ÿà®¨à¯à®¤à®¤à¯. அதன்மேற் பறங்கியரசு 40 வருஷமும், ஒல்லாந்தவரசு 150 வருஷமும் நடந்தொழிய, 1796ல் ஆங்கிலவரசு வந்து நடக்கின்றது. இப்படியே யாழ்பாணம் ஏறக்குறைய 2000 வருஷ சரித்திரமுடையது. 
யாழ்ப்பாணப் பூர்வசரித்திரத்திற்கு ஆதாரநூல்களாயிப்போதுள்ள வைபவமாலையும்,கைலாசமாலையுமே. அவையுஞ் சொரூபந்திரிந்துவிட்டனவாய்த் தோன்றுகின்றன. பறங்கிக்காரர் காலமுதலாகப் பிற்காலத்துச் சரித்திரம்பறங்கிகாரராலும் ஒல்லாந்தராலும், ஆங்கிலேய காலத்துச் சரித்திரம்;, ஆங்கில காலத்துச் சரித்திரம் ஆங்கிலேயராலுமெழுதப்பட்டிருக்கின்றன.பறங்கிகாரரும் ஒல்லாந்தரும்தமது கொடுங்கோன்மையைக் குறைத்தும் திரித்தும் எழுதியிருப்பதால் அது முழுவதும் உண்மையெனக் கொள்ளப்போகாது. வைபவ மாலைக்கு முன்னே வையை பாடலென ஒரு சரித்திரமிருந்தது அஃதகப்படவில்லை.  à®•à®°à¯à®£à®ªà¯à®ªà®¾à®°à®®à¯à®ªà®°à®¿à®¯à®•à®¤à¯ˆà®¯à¯à®®à¯ இக்காலத்தார்க்கு வினோதம் பயவாமையால் கேட்பாருமில்லை. சொல்வாருஞ்சுருங்கினர். மருதங்கடவெலையிலே P.W..D கிளாக்காயிருந்த à®®.ஸ்ரீ அம்பலவாணர் கெக்கெரியாக் கிராமத்திலே ஒரு சிங்கள வீட்டிலிருந்து தாம் பெற்ற கடலேட்டுக் காதைப் பிரதியைச் சிலகாலத்துக்கு முன்னே எனக்கு உபகரித்தினர். அதிலிருந்தகப்பட்ட செய்யுலே யாழ்ப்பாடி பரிசு பெற்ற காலத்தை நிரூபித்தது. அதுமட்டு மன்றி இன்னும் அநேக விஷயங்கள் யாழ்பாணச்சரித்திரத்திற்கு இன்றியமையாதனவாயப்பட்டன. இதற்குமுன், யான் சென்னையில் வசித்த காலத்திலே 1987ம் வருடம் காஞ்சீபுரத்திலே ஸ்ரீமத் மாசிலாமணி தேசிகரிடத்திலே யாழ்பாணத்தைப் பற்றிய சிலகுறிப்புகளுள்ள ஓரேடிருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றேன் அவர் அதனைக்காட்டுதற்கு ரூபா ஐம்பது கேட்டார். அது பெருந்தொகையென விடுத்து இரண்டு வருஷத்தின்பின்னர் அவர் வீட்டுக்கு மீண்டுஞ் சென்றேன். அவ்வமையம் பணச்செலவின்றி அவ்வேட்டுப் பிரதியை ஆராயவாய்த்தது. அஃதொரு புரோகிதக்குறிப்பு அதனோடு இருபத்தேழு ஏடுகளிருந்தன. எல்லாம் ஒரு பழைய பிராமணப் புரோகிதக் குடும்பதுக் குறிப்பேடுகள்;. ஆராய்ந்தவிடத்தகப்பட்ட விஷயங்களையெல்லாம் மூன்றுநாளிற் குறித்துக்கொண்டு மீண்டேன் அக்குறிப்புகளே இந்நூலுக்குப்பெரிதும் உபகாரமாயின. 
அச்சங்குளம் உடையார் ஸ்ரீ மணியரத்தினம் ஓரேட்டுப் பிரதியனுப்பினார். அதிலும் சாதிவரிசையைப் பற்றி அநேக விஷயங்கள் அகப்பட்டன. ஸ்ரீமத் விசுவநாதசாஸ்திரியார் எழுதிவைத்த பலகுறிப்புத்திரட்டொன்றகப்பட்டது. அதிலும் சில அரிய குறிப்புக்களகப்பட்டன. கர்ணபாரம்பரிய சரித்திரங்களும் வட்டுக்கோட்டை ஸ்ரீமத். நா. சிவசுப்பிரமணிசிவாச்சாரியாரிடத்தும், மகாவித்துவான் ஆறுமுக உபாத்தியாரிடத்தும், கத்தோலிக்க பாதுகாவலப் பத்திராதிபர் ஸ்ரீ தம்புப்பிள்ளையிடத்தும் சில கேட்கப்பட்டன. இவற்றோடு,Boake’s Mannar ,Ribeiro’s Cei:ao, Obeyesekere’s Ceylon Histpry by P. Arunachchalam முதலிய நூல்களிலும் அகப்பட்டன. அவைகளும் இச்சரித்திரத்திற்குதவியாயின. 
நூலியற்றுமருமை நூலியற்றினோரேயறிவர். இந்நூலையாத்துக்கொண்ட கஷ்டம் எனக்கே தெரியும் நூலிற்குற்றந் தெரித்தலோ எளிது. குற்றந்தெரிக்கப்படாத நூலுமோ இல்லையென்னலாம். யான் அறிந்தவரையிலும் எனக்கெட்டியவரையிலும் எனக்கியன்றவரையிலும் இந்நூலை ஆராய்ந்தே செய்தேன். இதிற் கூறப்பட்டனவெல்லாம் நூலாதாரமும் கன்னப்பரம்பரையாதாரமும் எனதறிவாதாரமுடையன. யாழ்பாணச்சரத்திரமொன்றியற்ற வேண்டுமென நெடுநாட் கொண்ட காதலால் அது சம்மந்தமாக எனதாராய்ச்சியிற் பட்டனவற்றையெல்லாஞ் சேர்த்து நூலாக்கினேன். குற்றம் போக்கிக்கொள்ளத்தக்கனவற்றை உலகம் கொள்ளுக. 
இந்நூலை அச்சிட்டு வெளிவிடும் பொருட்டு வலிந்துரூபா ஐஞ்நூறு உபகரத்தவர் சிங்கப்பூர்ர் பகுதியிலே குவாலாலம்பூரிலே கோட்டுத் துவிபாஷகராயிருக்கும் ஸ்ரீமான் கா. தம்பாபிள்ளையவர்க்கும் இவருடைய ஜனனவூர் தமிழரசர்காலத்திலே பிரதமமந்திரிக்கு வாசஸ்தானமாயிருந்த யாழ்ர்பாணம் திருநெல்வேலி. இவர் ஒல்லாந்தர் காலத்திலேயே தோம்பதிகாரமாயிருந்த பழங்குடி வேளாண்டலைவர்ராமநாதபிள்ளைவழித் தோன்றல். இவர் இந்துக்கல்லூரி மூலநிதிக்கு ரூபா ஆயிரம் வழங்கியபரோபகாரி. வித்தியாபிவிருத்தியிலே பேரபிமானமுடையவர். இவருடைய வித்தியாபிமான சின்னமாக இந்நூலை அவர்க்குச் சமர்பித்துப் பிரகடனஞ்  à®šà¯†à®¯à¯à®•à®¿à®±à¯‡à®©à¯. இவருடைய வாண்மைக்கிணையும் கைமாறுங் காண்கினறிலேன். 
இந்நூலிலேயுள்ள சித்திரப்படங்கலெல்லம் மானிப்பாய்த் தொல்குடித் தீபமாகிய ஸ்ரீ சு.கனகரத்தினம் (Mrs. S.K. Lawton) அவர்கள் அமைத்தன. இவருக்கும் பிரதிநிதிகள் தந்துதவினோர்க்கும் எனதிதய பூர்வமான நன்றி கூறுகின்றேன். 
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை 
யாழ்ப்பாணம்
நாவலர் கோட்டம்
22.07.1912

 
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை புத்தகங்கள்
2008 - வரலாறு - யாழ்ப்பாணச் சரித்திரம்
2017 - வரலாறு - யாழ்ப்பாணச் சரித்திரம்