Kunarasa, K (25.01.1941 - 28.02.2016)

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுகதை வரலாறு என்னும் நூல் அமைகின்றது. செங்கை ஆழியான் நோக்கும் போக்கும் ஈழத்தின் தமிழ் இலக்கியக் களங்களை அகலித்து ஆழப்படுத்துகின்றது.   

க.குணராசா ( செங்கை ஆழியான் ) புத்தகங்கள்
2009 - இலக்கிய வரலாறு - ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு