Kokila Mahendiran

தெல்லிப்பழை மகாஜனா அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வியான கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி, எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், உளவியலாளர் எனப் பன்முக ஆளுமை பெற்று மிளிர்ந்து வருபவர். தனது ஆழமான, வித்தியாசமான உளவியல் கண்ணோட்டத்தாலும் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய விளையும் முனைப்பினாலும் தாம் தொட்ட துறைகளிலெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

அவலத்தில் வாழ்கின்ற எம் மக்களுக்கு இரண்டு தசாப்த்தங்களாக உளவளத்துணை வழங்கிப் பலரின் வாழ்வுக்கு உரமூட்டியவர்.

'மற்றவர்களுக்குப் பயன் உடையதாய் வாழ்தலே வெற்றிகரமான வாழ்க்கை' என்று தனது மாணவர்களுக்கு எப்போதும் கூறும் கோகிலா மகேந்திரன் தமிது பல்துறை ஆளுமையை அதி உச்ச அளவிற்குப் பாவித்துத் தமது உளவியல் சார் நூலாக்கப்பணிகள் மூலமும் உளவளத்துணை ஆலோசனை மூலமும் மானுடம் வெல்லத் தோள் கொடுத்து வருகிறார்.  

கோகிலா மகேந்திரன் புத்தகங்கள்
2009 - உளவியல் - உள்ளம் பெருங் கோயில்
2008 - உளவியல் - மனமெனும் தோணி