Kanesalingam, K.T

கே.ரீ.கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமன்றி, ஆய்வுக் கலாச்சாரத்திலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். இதற்கான தகுதியை ஆளுமையை அறிவை விருத்தியாக்குவதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 

இவர் எண்பதுகளுக்குப் பின்னர் உருவான புதிய தலைமுறைக் குழாமைச் சாரந்தவர். இதனால் சமூகப் பொறுப்பு, அரசியல் நிலைப்பாடு, கருத்து நிலைத் தெளிவு, பன்முகத் தேடல், போன்ற உயரிய பண்புகளை உள்வாங்கும் திறன் கொண்டவர். இதற்கான மனப்பாங்கு, ஆளுமை விகசிப்பு, ஆய்வு பனப்பாங்கு போன்றவை இவரது பலமான அம்சங்களாகும். திழில் அரசியல் கலாச்சாரம் பற்றிய சிந்தனைக்கும் ஆய்வுத் தேடலுக்கும் புதுக்களங்களை அடையாளங்காட்டுவதில் முனைப்புடன் உழைத்து வருகிறார். 

கே.ரீ.கணேசலிங்கம் புத்தகங்கள்
2013 - அகராதி - சமகால அரசியல் கலாசார செல்நெறிகள்
2011 - அரசியல் - பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு
2010 - அரசியல் - சர்வதேச அரசியல் சில பார்வைகள்
2008 - வரலாறு - தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
2019 - அரசியல் - இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு
2019 - அரசியல் - பலஸ்தீனம் ஓர் அரசியல் வரலாறு