Book Type (புத்தக வகை) : வரலாறு
Title (தலைப்பு) : தொன்மைச் செம்மொழி தமிழ்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-07-01-041
ISBN : 978-955-1857-40-0
EPABNo : EPAB/02/18598
Author Name (எழுதியவர் பெயர்) : பி.இராமநாதன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 113
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 240.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் இன்றைய செயற்பாடுகள்
  • தமிழ் செம்மொழியே : கருத்துரைகள், கோரிக்கைகள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை
  • செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் ( சங்க இலக்கியங்களின் ) தனிச்சிறப்பு 
  • செம்மொழித் தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் பெயர்த்தல்
  • தமிழின் தொன்மை : பிற அறிவிப்புப் புலங்களுடன் இணைந்த ஆய்வு ( சிந்துவெளி நாகரிக ஆய்வு - அந்நாகரிக எழுத்தாய்வு உட்பட )
  • இந்திய மொழிக் குடும்பங்களிடையே தமிழியக் கூறுகள்
  • தமிழின் எதிர்காலம்  : ஒரு தொலைநோக்கு 
Full Description (முழுவிபரம்):

கால்டுவெல் 1856இல் தமது 'தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை' வெளியிட்டதுமே உலக மொழியியலறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, செம்மை முதலியவற்றையும், ஞால முதன் மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியதாக நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தனர். எனினும் 'செம்மொழி' என ஒரு மொழியை ஏற்றிடத் தொன்மைமொழியாயினும் அம்மொழி இலக்கியம் சிறந்ததாகவும், தனித்தன்மை வர்ந்ததாகவும், பிறமொழி இலக்கியங்களை அடியொற்றி உருவாகாததுமாகவும் இருக்க வேண்டும். 1850 க்குப் பின்னர்தான் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கிங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. 1900 அளவிலேயே மொழி அடிப்படையிலும் சரி. இலக்கிய அடிப்படையிலும் சரி, தமிழ் செம்மொழியே என்பதை உலக அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது. இந்திய நடுவண் அரசு அளவில், தமிழ் மொழி செம்மொழி என மிகக் காலம் தாழ்ந்து 2004இல் தான் ஏற்கப்பட்டது. இதற்கு பலரும் காரணமாவர் - தமிழர்களாகிய நாம் உட்பட, செம்மொழி கோரிக்கை வரலாற்றை இந்நூல் இயல் இரண்டில் காண்க.
காலப் பழமையால் வைரம் பாய்ந்து!
நாகரிகத்தின் நாற்றங் காலது
எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற
செம்மொழி! உலகச் சிந்தனைக்கெல்லாம்
ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை!