கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும் |
கல்வி என்பது மாற்றம் என்பதாகவும் பொருள்படும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் களுக்கு இன்று பல்வேறு வேலைப்பளுக்கள் காணப்படுகின்றன. அதில் மாணவர்களை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டிய கட்டாய கடப்பாடும் உண்டு. தேர்ச்சிமையக் கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் விரும்புகின்ற இடமாக வகுப்பறைகள், பாடசாலைகள் மாற்றம் காணுமாக இருந்தால் மாத்திரமே வேலைகளை இலகுவாக்கி கற்றல் கற்பித்தலில் மாற்றத்தைக் கொண்டுவந்து நாளைய உலகிற்கான நற்பிரஜைகளைத் தோற்றுவிக்கின்ற, புத்தாக்கமுடைய, சிந்தனைச் சிற்பிகளை உருவாக்க முடியும். இதனைத்தான் இன்றைய கல்விப் புலமும் எதிர்பார்க்கின்றது. |