திருக்குறளும் முகாமைத்துவமும் |
கலாநிதி தி. வேல்நம்பி பல்துறை வல்லுநர். சமூக விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த அவர் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்த் திறனாய்விலும் பரிச்சயமுடையவராயுள்ளார். சிறந்த தமிழ்ப் பேச்சாளர். பட்டிமன்றங்களிலே பங்குபற்றித் தமிழ்ப் புலமையினை வெளிப்படுத்தி வருபவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பாடத்தில் முதுகலைமாணிப்பட்ட கற்கைநெறி தொடங்கியபோது, அதிலே சேர்ந்து கற்றவர். முதுகலைமாணிப் பட் டத்துக்காக அவர் எழுதிய ஆய்வேடு மிகச் சிறந்ததாக அமைந்தது. என்னுடைய வழிகாட்டலிலே அவர் அந்த ஆய்வேட்டினை எழுதிப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்தார். அது இப்பொழுது திருக்குறளும் முகாமைத்துவமும் - ஓர் ஒப்பீட்டாய்வு என்னும் தலைப்புடன் நூலாக வெளிவருகின்றது. |