கல்வியியலும் கணிப்பீட்டியலும்
|
நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் மாணவர் மதிப்பீடு என்பது கணித வாய்ப்பாட்டு அளவுக்குள் கணிப்பீடு குறுகி விடுகின்றது.
இன்று கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உரிய முறையில் கவனம் செலுத்தாது கணிப்பீட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. இதனால் கல்விச் சூழலில் கல்வி அம்சங்களை முழுமையாக அரித்துச் செல்லும் பாசிச ஆதிக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்தப் பின்புலங்களை நாம் தெளிவாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக கணிப்பீடு என்பது ஒரு கருவி. இதனை நேர்வழியிலும் பயன்படுத்தலாம், எதிர்நிலையாகவும் பயன்படுத்தலாம். இன்றைய சூழலில் இதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும் தவறான செயற்பாடுகளை அதிகமாக மேலோங்கி வருகின்றன. குறித்த ஒரு மாணவர் பாட அடைவுக் கணிப்பீட்டில் உயர்ந்த புள்ளிகளையும் வேறொரு மாணவர் குறைந்த புள்ளிகளையும் பெற்றால், குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவரை ஒட்டு மொத்தமாகத் 'தாழ்ந்தவர்' என்று கருதும் மனோபாவம் இடம்பெற்று வருகிறது. இது கணிப்பீட்டின் தவறான வழியில் காட்சி கொள்ளலாகின்றது. இவ்வாறே கருத்தாக்கமும் செய்யப்படுகின்றத
|