புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்

ஆரம்பத்தில் இருந்து மனித சமுதாயத்தில் கல்வியும் வளர்ந்து வந்துள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொரு ஜீவியும் கல்வி வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதைத் தேவையானதைக் கற்றுக்கொண்டே வந்துள்ளார்கள். கற்றல் என்பது மனிதரது இயல்பான பண்புகளில் ஒன்றானது. மனிதர்கள் தொடர்ந்து புதியவற்றைத் தேடியும் கண்டுபிடித்தும் கல்வியின் பல்பரிமாண விருத்திக்கும் சாதகமான தன்மைகளை உருவாக்கி வந்துள்ளார்கள்.
கல்விச் செயற்பாடு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு, கருத்துநிலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக நாடுகளின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியில் கல்விச்செயற்பாட்டின் பங்களிப்புக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படும் நிலைமைகள் படிப்படியாக மேற்கிளம்பின. கல்வியின் நவீன செல்நெறிகள் மனிதாயப்பட்ட போக்குகளின் மற்றும் அவற்றின் செயல்தன்மைகளின் உள்ளீடுகள் நிரம்பிய தளமாகவும் உருப்பெற்றன. இந்த நோக்கில் கல்வி பற்றிய சிந்தனைகளின் களம் மேலும் மேலும் விரிவும் ஆழமும் கண்டது, கண்டு வருகின்றது.
சமகாலத்தில் பாடசாலை மற்றும் உயர்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள் கல்விசார் அறிவுத் தொகுதியில் பெரும் மாற்றங்களை, பாய்ச்சல்களை உருவாக்கியுள்ளன.  இன்று கல்விசார் அறிவுத்தொகுதி 'கல்வியியல்' அறிவுத்தொகுதியாக கற்கைப் புலமாக வளர்ச்சியடைந்துள்ளது. சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த அறிவுத் தொகுதிகளுக்கு ஈடாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பெரும் பாய


சிவகுமார் நிரோசன்
Mr.Niroshan

சிவகுமார் நிரோசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினை முதற்தரத்தில் பெற்றுக்கொண்டதோடு, அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணி ஆய்வினையும் மேற்கொண்டு வருகின்றார்.  இவர் மெய்யியற் பிரச்சினைகள் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன், பல்கலைக்கழகங்களில் நிகழும் சர்வதேச ஆய்வரங்குகளிலும் கலந்து, பல ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.  மெய்யியலைக் கற்கும் மாணவர்களுக்கு  இந்நூல்  சிறந்த வழிகாட்டியாக அமையும்.