புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மனமெனும் தோணி

தாயின் பலோப்பியக் குழாயில் கருக்கட்டல் நடைபெற்ற உடனேயே குழந்தையைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் உளவியல் குழந்தை வளர்ந்து பிள்ளையாகி பிள்ளை கட்டிளமைப் பருவத்துக்கு வந்து, இளைஞராகி, மத்திய வயதுக்கு வந்து, முதியவராகி இறக்கும் வரை அந்த மனிதரின் எண்ணம், உணர்வு, நடத்தை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கிய வாழ்க்கைக்கூறு ஆகிறது. 
'மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி' என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எமது இந்து சமயத்தில் குறிப்பிட்டபடி மனம் எனும் தோணியை உறுதியாகப் பற்றிக் கொள்ளாவிட்டால் வாழ்வு எனும் பெருங்கடலை மகிழ்வுடன் கடக்க முடியாது. மகிழ்வுடன் வாழ்தல் என்பது உயிரிகள் அனைத்துக்கும் மிக இயல்பாக உள்ள உந்தல் அல்லது அதுவே அவற்றின் வாழ்வு இலக்கு. வேதனைப்படுவதற்கு எந்த உயிரியும் விரும்புவதில்லை. மனிதர்களுக்குத் தம்வாழ்வில் நிறைவேற்ற விரும்பும் வேறு உயர் இலக்குகள் இருக்கலாம். ஆயினும் சந்தோஷமாக, அமைதியாக வாழ்தல் என்ற இலக்கைத் தொலைத்து விடக்கூடாது. அந்த இலக்கு இல்லை என்றால் வேறு எந்த இலக்கையும் அடைந்து விடமுடியாது. அமைதியாக ஆறுதலாக வலைப்பந்தை எறிந்தோமானால் அது பேற்றுக் கம்பத்தின் வளையத்தினூடு விழுந்துவிடும். அதையே பதற்றத்துடனோ, பயத்துடனோ அல்லது கோபத்துடனோ எறிந்தோமாயின் பெரும்பாலும் விழாது. 
சில மனிதர்களை நாம் புத்திசாலிகள் என்கிறோம். நுண்மதி மிக்கவர்கள் என்கிறோம். நுண்மதி என்பது காரணம் காணும் திறன் சூக்கும சிந்தனை, கற்றல்திறன், கற்றவற்றை உபயோகிக்கும் திறன், வேகமான சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் ஆற்றல், சூழலுக்கு இசைவாகும் திறன் என்ற பல வ


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.