புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழ் அழகியல்

அழகியல் கலையின் அழகுசார் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைக் கொள்கைகள் பற்றி விசாரணையாக விளங்குவது கலை உருவாக்கம், ரசனை, வியாக்கியானம், விமர்சனம், மதிப்பீடு போன்ற விடயங்களின் அடிப்படையிற் கலைகளையும், கலைக்கொள்கைகளையும் ஆராய்வது. மேலைத்தேசத்தைப் பொறுத்த மட்டில் அழகியல் நீண்டகால தத்துவத்துறையின் ஒரு பிரிவாக வளர்ந்து பின் தனித்துறையாக தனக்கேயுரிய முறைமையியலூடு வளர்ந்து வந்தது. ஒரு செழுமையான கலை விமர்சனம் அரிஸ்டோட்டில், பிளேட்டோ காலத்தில் இருந்து வந்தமையை அழகியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைத்தேய அழகியல் வரலாற்றில் ரசனை பற்றிய கருத்தாடல் மூலம் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமான, ஆரோக்கியமான,   ஓர் விமர்சனம் கலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதற்கு வழிவகுத்தது.  
    மேலைத்தேயக் கலை மெய்யியலாளர்களில் இமானுவேல் காண்ட் (1790) (வுhந ஊசவைஙைரந ழக யுளநவாநவiஉ துரனபநஅநவெ) டேவிட்  ஹியூம்(1757) (வுhந ளுவயனெயசநன ழக வுயளவந) போன்றோர் ரசனையை அடிப்படையாகக் கொண்ட கலை, அழகியல் அநுபவம் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர். இந்திய அழகியல் சமஸ்கிருதக் கவிதையியலை ஆதாரமாகக் கொண்டு அலங்கார சாஸ்திரங்களின் அடிப்படையில் வளர்ந்து வந்துள்ளது. பரதரது நாட்டிய சாஸ்திரம் தொடக்கம் பண்டிதர் ஜெகன்னாதரது ரஸகங்காதரம் வரைக்கும் அலங்கார சாஸ்திர நூல்கள் தோன்றி வளர்ந்துள்ளன. 
    இந்நிலையிற் தமிழ் அழகியல் பற்றிய ஆய்வுகள் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று ஆராயும் போது, அது வரன்முறைக்குட்பட்ட வகையில் ஆராயப்பட்டுள்ளதா


க.சின்னத்தம்பி
K.Sinnathampi

கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரையாளராக பேராசிரியராக துறைத் தலைவராகப் பலநிலைகளில் பணியாற்றியவர். நீண்டகால கற்பித்தல் அனுபவமும் ஆராய்ச்சி மரபும் கொண்டவர். ஆசிரியர் கல்வியில்       புத்தாக்கமும் பல்பரிமாணமும் சிறக்க உழைத்து வருபவர்.
 
இவர் விஞ்ஞான கணித அறிவுத் தொகுதியின்  விரிவாக்கப் புலங்களை உடனுக்குடன்        உள்வாங்கி கல்வியியலில் புதுமலர்ச்சி ஏற்பட முயற்சிப்பவர். இவரது நூலாக்கப் பணிகள்   கல்வியியல் துறையில் புதுஆய்வு மரபு, ஆக்கமலர்ச்சிப் பண்புகள் புத்தாக்கச்           சிந்தனைகள் ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. இதற்கு இவரது ஆக்கங்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன.

சமகால கல்வி வளர்ச்சியில் தரவிருத்தியை உறுதிப்படுத்தும் ஆய்வுக் களங்களை         முன்னிறுத்தி இயங்கி வருபவர்.