பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும் |
நிறுவனத்தின் முகாமையாளர்கள் ஒவ்வொருவரும் முகாமைத்துவக் கோட்பாடுகளை அறிந்திருத்தல் இன்றியமையாதது. நிறுவனம் தொடர்பான பயனுள்ள அகக்காட்சியைப் பெறுதல், நிறுவனத்தின் வளங்களைச் சிறப்பாகப் பண்படுத்துதல், விளைதிறனுள்ள முகாமைத்துவம், விஞ்ஞான முறையிலான தீர்மானம் மேற்கொள்ளல், சூழல் மாற்றங்களால் ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுதல், சமூகப் பொறுப்பினைப் பூர்த்திசெய்தல், பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சிகளை முகாமைத்துவம் செய்தல் முதலிய விடயங்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு முகாமைத்துவக் கோட்பாடுகள் பக்கபலமாக இருக்கின்றன. பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பை ஏற்பவர்கள் அன்றாட நிருவாகச் செயல் முறைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாது நிறுவனத்திலுள்ள சகல வளங்களையும் விளைதிறனுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் விளைதிறனை மேம்படுத்துதல் அத்தியாவசியமானது. |