தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் |
உலகின் மிக தொன்மையா மொழி நம் தாய் மொழிதமிழ்;பண்டை நாகரிகங்களுள் தலை சிறந்தது நம் தமிழ் நாகரிகம். ஆனால் நம் தமிழின் தொன்மையையும் நம் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாட்டு வரலாறு என்று பல வற்றின் பெருமைகளையும் வந்தேறி ஆரியமும் அதன் பின்தோற்றல்களும் சீர்;குலைத்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். இனப்பகைளும் அவற்றின் அடிவருடிகளும் காலம் காலமாக நம் மொழிமீதும், நம் இன வரலாற்றின் மீதும் பிறகூறுகளின் மீதும் வாய்ப்பு நேரும் போது மட்டுமின்றி வாய்ப்பை வலிய வரவழைத்தும், அரசியல் சாய்கால் பெற்றும், வெளிப்படையாகவும் கரவாகவும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அளவிறந்தன. குமரி முனைக்குத் தெற்கே சிலநூறு கற்கள் நிலப்பகுதி இருந்து பின், இற்றைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்கலாம் என்று இன்றைய அறிவியல் ஏற்றுக்கொண்ட ஆய்வு முடிவைப் புறந்தள்ளி 'கடல் கொண்டதென்னாடு' பற்றி எழுதிய தமிழறிஞசர்கள்அனைவரையும் தாக்கி ஏளனம் செய்து நூல் வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே என்ற உண்மையை மறைத்து ஆரிய நாகரிகமே என்று பொய்யாகப் புனைந்து நிலைநாட்டும் முயற்சி ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நடந்தது. |