கதைக் கனிகள் |
அமரர் வி.அரியநாயகம் அவர்களின் புனைவுகள் தனித்துவமானவை. கதையுரைக்கும் நீண்ட மரபினதும் கற்பித்தல் நெடுவழியின் பதிவுகளினதும் அனுபவச் சுவடுகளைத் தாங்கியவையாக அவரது ஆக்கங்கள் முகிழ்ப்புக் கொண்டுள்ளன. கதை சொல்லலில் விளைவின் (Effect) முக்கியத்துவத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் அதன் வழியாக விழுமியக் கையளிப்பை மேற்கொள்ளும் இலக்கை முன்னெடுத்துள்ளார். அந்நிலையில் அவரது ஆசிரியத்தின் செவ்வழி புலப்படு கின்றது. கதை கேட்போரின் அறிகைத்தளம், சொல்லும் பொருளின் உட்பொதிவு, எடுத்துரைப்பு முறைமை, விளைவுகளின் சலனம் முதலிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகக் ஷகதைக்கனிகள் மேலெழுகின்றன. கதை நகர்த்தலின் தொடர்ச்சி கற்பித்தலின் நகர்ச்சியாகின்றது.
கற்பித்தலும் கதை சொல்லலும் கதைக்கனிகளிலே ஒன்றிணைந்து சங்கமிக்கின்றன. கற்பித்தலின் பரிமாணங்களுள் ஒன்றாகிய உளவியலும் கதைகளிலே உட்புகுந்துள்ளது. சிறப்பாக அறிகை உளவியல், மானிட உளவியல் முதலியவற் றின் அசைவுகள் கதைகளிலே விரவியுள்ளன.
இங்கு கதைகளை முகாமைப்படுத்தும்| கையாட்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘கதை முகாமை” என்ற எண்ணக்கரு கதை மீது செலுத்தப்படும் கட்டுப்பாட்டையும், நெறியாள்கையையும், வினைப்படும் இயக்க முன்னெடுப்புக்களையும் கு
|