வித்தியின் தமிழியற் பதிவுகள் |
மறைந்த மூதறிஞர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் வாழ்க்கைப் பணிகளையும் சாதனைகளையும் தமிழ்த் துறைப் பங்களிப்பையும் நினைவு கூறுமுகமாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியின்போது அன்னார் எழுதிய பல பிரதான கட்டுரைகளின் தொகுப்பொன்று வெளியிடப்படுவது மனங்கொளத்தக்கது. இம்முயற் சிக்குப் பெரிதும் உதவிய சேமமடு பதிப்பகத்தார் திரு.பத்மசீலன், நினைவுக்குழுவின் பிரதான உறுப்பினர் திரு.மதுசூதனன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அண்மைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியரின் எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் செய்துவரும் இவர்களின் தமிழ்ப்பணி பெரிதும் வரவேற்கத்தக்கது. |