தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும் |
கோளமயமாக்கலின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் தாய்மொழியின் விசைப்பாடுகளை அறியத் தவறிவிடுமளவுக்கு கோளமயமாக்கல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை கொண்டுள் ளன. இந்நிலையில் தாய்மொழி பற்றிய தெளிவான புலக்காட்சியைத் தருக்க நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்துமாறு நண்பர் கள் நீர்வைப் பொன்னையன், தம்பு சிவசுப்பிரமணியம், தெ.மதுசூதனன், உலகநாதர் நவரத்தினம் ஆகியோர் வேண்டிக்கொண்டனர். |