யாழ்ப்பாண அகராதி
|
மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது.
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் கூறியபொழுது ஈழத்தின் ஆய்வாளர்கள் இருவரது குறிப்புரைகளைப் பெறுவது நலம் எனக் கூறினேன். ஒருவர் ஈழத்துத் தமிழ் கிறித்தவ இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாகக் கொண்டு அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவரான பேராயர் வண.எஸ்.ஜெபநேசன் ஆவார். இவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்டப் பேராயராக இருந்தவர். மற்றவர் ஈழத்திலக்கியத்தைக் குறிப்பாக பதினேழு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாக கொண்டுள்ள பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆவார். இவர்கள் இருவரது குறிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அக்குறிப்புரைகள் இரண்டும் இந்த அகராதி பற்றிய வி
|