தி.செல்வமனோகரன் Mr.Selvamanoharan
|
திருச்செல்வம் செல்வமனோகரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர் 'இந்து மெய்யியல்' துறையை தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள் குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது. மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித் தமக்கான விமரிசனச் சிந்தனைசார் நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை வளர்த்து நிதானமாக இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்' குறித்த தேடல் தவிர்க்க ம
|