கலைத்திட்ட மாதிரிகைகள் |
ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வருக்கும் கலைத்திட்டம் தொடர்பான அறிவு இன்றியமையாத தாகும். இந்நூல் கலைத்திட்டத்தின் ஒழுங்கமைப்பு, உள்ளடக்கம், கலைத்திட்ட மாதிரிகைகளின் அமைப்பு, இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களில் கலைத்திட்ட மாதிரிகைகள் செலுத்தியுள்ள செல்வாக்குகள் என்பன தொடர்பாக ஆராய்கின்றது. ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' நூலில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வேறு சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' 2010 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும். இந் நூல் சந்தையில் முழுமையாக முடிவடைந்ததன் காரணமாகவும் இந்நூலை மீண்டும் பதிப்பிக்குமாறு பல மட்டங்களில் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவுமே இத் திருத்திய பதிப்பு வெளியிடப்படுகின்றது. இந்நூல் தற்காலக் கல்விச்சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானவாறு இற்றைப்படுத்தப் பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக்கல்வி டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்விமுகாமைத்துவ டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
|