கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
|
காலச் சுழற்சி, நவீன தொழில்நுட்பவியலின் வேகமான பரவல், புதிய உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொன் றுக்காக பலவற்றை இழந்தும், காலத்தின் பறிப்பும், வழங்கலுமாக வாழ்வுக்கான போராட்டமாக மனிதம் சுழன்றுகொண்டுள்ளது. இதில் தகவல் தொடர்பாடல் nhழில்நுட்பம் என்பது மனித வாழ்விய லுக்குள் முக்கியத்துவம் பெற்றுவருவது தவிர்க்க முடியாததாகி விட்டது. உலகில் எங்கு எனன நிகழ்ந்தாலும் அதனை உடனேயே கைக்குள்ளே கொண்டுவரக்கூடிய வகையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை வளர்ந்துள்ளது.
கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் தாக்கம் பற்பல கற்பித்தல் முறைகளையும், தகவல் வளங்களையும் தொழில்நுட்பம் மற்றும் அறிவு நுணுக்கத் திட்டமிடல்களையும் உள்வாங்கி தனியே ஒருவர் என்றில்லாமல், மாணவர், ஆசிரியர், பெற்றோர், குடும்பம், சமூகம், நாடு, சர்வதேசம் என பரந்து விரிந்து காணப்பட்டு இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் வலைப்பின்னலி னூடாக எம்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், கற்போருக்கு பயனுள்ள தகவல்களையும் திறன் களையும் கற்பிப்பது மட்டும் நமது ஒரே நோக்கமாக இருக்க முடியாது. அவர்களை பயனுறுதியுள்ள கற்போராக மாற்றுவதும் நமது நோக்க மாக இருக்க வேண்டும். அதாவது அவர்கள் தன்னிச்சையான கற்போராக மாற வேண்டும். தமக்குத் தேவையானவற்றை தாமே தேடிப்பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கற்றல்-கற்பித்தல் வழிமுறைகள் அமைந்திருக்க வேண்டும்.
கல்வித்தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்பத்துறையிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இதன
|