இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்
|
இலக்கியத் திறனாய்வின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் ஆக்கமாக இந்நூல் மேலெழுந்துள்ளது. பழைமையின் இயல்புகளையும் புதுமையின் வகைப்பாடுகளையும் அறிதல் திறனாய்வின் புலக்காட்சியை வளம்படுத்திக் கொள்வதற்கும், திறனாய்வு அறிகையை வலுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புத் தருகின்றது.
'திறனாய்வு எங்கும் தலை நீட்டுகின்றது' (ஊசவைiஉளைஅ ளை நுஎநசல றூநசந) என்ற கருத்து அது பற்றி அறியும் தேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. இத்துறையின் இற்றைப்படுத்தலை முன்னெடுக்கும் நூலாக்கத்தின் தேவையை நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு பதிப்பகத்தின் இயக்குநர் பூ.பத்மசீலன் அவர்களும் குறித்துரைத்தனர். அவர்களின் விருப்பம் இந்நூலாக வரைவு பெற்றுள்ளது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இந்நூலை எழுதுவதற்குத் தொடர்ந்து உற்சாகம் தந்தனர். சிறப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் திரு.கே.இரகுபரன் அவர்களும் உற்சாகத்துக்கு விசை தொடுத்தனர். இவர்கள் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
சபா.ஜெயராசா
நாம் தமிழ்ப் பதிப்புத்துறைக்குள் குறுகிய காலத்துள் நுழைந்து இன்றைய கல்வித் தேவைக்கருதி மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். இந்த ரீதியில் எமது பதிப்பாக்க முயற்சிகளுக்கு ஆரம்பம் முதல் ஆலோசனைகள், அறிவுரைகள் தந்து, தமது காத்திரமான நூல்களை வெளியிடவும் தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கிக்கொண்டிருக்கும் பேராச
|