Content (உள்ளடக்கம்): |
அறிமுகம்
அறிவு மூலவளமாகி, அனைத்து மூல வளங்களையும் இயக்கும் உந்துசக்தியாகத் தொழிற்படும் இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், மனித சமூகமானது, தனது தேடல்களைப் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமூக முன்னேற்றம் என்பது அச்சூழலில் அமைந்துள்ள தேடலுக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும்; பயன்படுத்தும் நிலையிலேயே சாத்தியப்படும். இத்தகைய பயன்பாடு; என்பது சுயசிந்தனையின்பாற்பட்டது. சுயசிந்தனைக்குக் களமாக இருப்பது பரந்துபட்ட வாசிப்பே ஆகும்;.
எழுத்தறிவு மட்டம் மிக உயர்நிலையிலுள்ள எமது சமூகத்தில் வாசிப்புத்திறன் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. கல்வியானது, வருமானத்துக்குரிய முதலீடாகக் கருதப்படும் இன்றைய சூழலில், கல்வி நிறுவனங்கள் கடுகதியில் சான்றிதழ்களை உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றன. கல்வியானது அறிவைப் பெருக்குவது என்ற நிலை மாறி, கல்வியும் அறிவும் சமாந்தரமாகிவிட்ட சமூக யதார்த்தம் சிந்திக்க வைத்ததன் விளைவே இந்த நூலக விழிப்புணர்வு நிறுவகமாகும்.
உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையான அளவு எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு வீதத்தைக் கொண்டது இலங்கைத் தமிழ்ச் சமூகம். பொதுவாக கல்வியை தொழிலுக்குரிய மூலதனமாகப் பார்க்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வாழ்க்கையின் பொதுப் பண்பாக அடையாளப்படுத்தப்படுவது, 'கசடு அறக் கற்க' விரும்பாத அசாதாரண சூழலும், கல்வியைத் தனியே பரீட்சைக்காக மட்டும் 'அவசர அவசர'மாகக் கற்று அதிலிருந்து மீண்டெழுந்தாற் போதுமென்ற மனநிலையில் அதைத் தேடி ஓடும் மாணவ சமூகமும் ஆகும்;. இச்சூழலைப் புறந்தள்ளி விட்டுக் கற்றலோடு கூடிய அறிவுத் தேடலை நம் இளஞ் சமூகம் பெற வழிகாட்ட வேண்டியதும், கூடவே வாசிப்புப் பழக்கத்தையும் தகவல் தேடலையும் பாடசாலையினருக்குப் பழக்கப்படுத்த வேண்டியதும் நூலகத் துறை சார்ந்த மூத்தவர்களது தலையாய கடமையாகும். இது இன்றைய காலத்தின் தேவை. அத்துடன் பல காரணங்களால் நொந்து நலிந்துபோயிருக்கும் எம் சமூகத்தின் இன்றியமையாத தேவையும் ஆகும். இத்தகைய தேவையை அடிநாதமாகக் கொண்டு தனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நூலகம் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் தட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு பல செயற்திட்டங்களை மேற்கொண்டவாறு நூலக விழிப்புணர்வு நிறுவகமானது தனது 10வது ஆண்டில் காலடி வைத்திருக்கின்றது.
நூலகங்கள், தகவல் நிறுவனங்கள், ஆவணவாக்க நிலையங்கள் போன்றவற்றைச் சமூகப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அறிவு ஆற்றல், அனுபவம் என்பவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நூலக விழிப்புணர்வு நிறுவகம். இவ்வுச்சப் பயன்பாட்டினை எய்துவதற்கு, ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒன்றிணைந்த, செயலூக்க அணியாகச் செயற்பட விரும்புகின்ற அனைவரையும் இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஸ்ரீ அருளானந்தம் அவர்களால் 2005ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் இந் நிறுவகம் தோற்றுவிக்கப்பட்டது. நிறுவகத்திற்கு ஸ்ரீ அருளானந்தம் அவர்களைத் தலைவராகவும், திரு.க.சௌந்தராஜன், திரு.ச.தனபாலசிங்கம் ஆகியோரை இணைச் செயலாளராகவும் திரு.மு.சின்னராசா அவர்களைப் பொருளாளராகவும் திரு.ம.வின்சன் குணாளன் அவர்களை உபதலைவராகவும் மேலும் பத்து நிர்வாக உறுப்பினர்களையும் கொண்ட நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டிருந்தது. நிறைவேற்றுக் குழுவிற்கு மேலாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வாசிப்பு மேம்பாட்டுக் குழு, வள அபிவிருத்திக் குழு, நூலக ஒழுங்கமைப்புக் குழு, ஆளணி அபிவிருத்திக் குழு, வெளியீட்டுக் குழு ஆகிய செயலணிகளைக் கொண்ட இந்நிறுவகம் அகலத் திறக்கும் தகவற் சேவைகளின் நுழைவாயில்களை மூடிவிடாமல் பலதரப்பட்ட செயற்திட்டங்களின் வழியாக அவற்றைச் சமூகமயப்படுத்தி வந்திருக்கிறது.
தொலை நோக்கு
அறிவின் எல்லையைத் தாண்டிய சுயசிந்தனைக்கும் தேடலுக்கும் ஆதார சுருதியாக அமையக்கூடிய வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பதனூடாக உயிர்ப்புடைய 'மனித' சமூகத்தைத் தோற்றுவிக்க ஒன்றிணைதல்;.
இலக்குகள்
· சமூகப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அறிவு, ஆற்றல், அனுபவம் என்பனவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்களை உருவாக்குதலும், சுய கற்கை நிலையங்களாகத் தொழிற்படுவதன் மூலம் அவற்றைச் சுயசிந்தனைக் களமாக மாற்றுவதற்கு வகை செய்த |