புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி ஆய்வியல்

அண்மைக்காலங்களில் கல்வித்துறையில் ஆய்வுச் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதனை நாம் காண முடிகின்றது. தனிநபர் தேவையின் பொருட்டும் பொதுநலன் கருதி பொது நிறுவனங்களினாலும் தனிநபர்களினாலும் பெருமளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலைமை காரணமாக ஆய்வில் ஈடுபடுவோர் ஆய்வியல் அறிவினைப் போதுமானளவிற்கு பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
இவ்வாறான நிலைமையில், ஆய்வில் ஈடுபடுமுன்னதாக ஆய்வு பற்றிய அறிவைத் திரட்டும் பண்டு ஆய்வாளரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆய்வு பற்றிய அறிவை, குறிப்பாகக் கல்வித்துறையில், தேடிக் கொள்வதற்கான ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டுமெனும் முதன்மை நோக்கோடு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வி ஆய்வியியல் தொடர்பான நூல்கள் தமிழ்மொழியில் அரிதாக உள்ளமையும் இந்நூல் உருவாவதற்கான தேவையாக அமைந்துள்ளது. நூலின் அடக்கத்தினை மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக, ஆய்வு தொடர்காபத் தெரிவு செய்யப்பட்ட சில முக்கிய விடயங்கள் மட்டுமே இந்நூலில் எடுத்தாளப்பட வேண்டி ஏற்பட்டமை தவிர்க்க முடியாதது. 
இந்நூலானது ஏழு இயல்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது இயல் ஆய்வியல் பற்றிய முன்னுரையாக அமைய, இரண்டாவது இயலில் ஆய்வின் பல்வேறு பரிமாணங்கள் சற்று விரிவாக நோக்கப்பட்டுள்ளன. ஆய்வுச் செயற்பாட்டில் இலக்கிய மீளாய்வு கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாக, அது பற்றிய முக்கியமான கருத்துக்கள் மூன்றாவது இயலாக அமைகின்றது. நான்காவது இயலில் ஐந்து வகையான ஆய்வு முறைகள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது இயலில் பல்வேறு வகையான மாதிரியெடுப்பு உபாயங்கள் விபரி


க.சுவர்ணராஜா
Suwarnarajah, S

கதிரேசன் சுவர்ணராஜா வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளர் இணைப்பாளராhக பணிபுரிபவர். ஆசிரியர் கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்டவர். பல்வேறு உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டவர்.   

இவர் கற்றல் - கற்பித்தல் பணிகளுடன் மட்டுமல்லாமல் ஆய்வுப் பணிகளிலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். கல்வி முகாமைத்துவம், ஆசிரியத்துவம், கற்பித்தலியல், கல்வி உளவியல், கல்வி ஆலோசனை  வழிகாட்டல் முதலான துறைகளில் ஆழமான ஈடுபாடும் நடைமுறைப் பிரயோகமும் கொண்டவர். இதனால் பல்வேறு புதிய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆக்கங்களையும் படைத்துவருபவர்.  
 
சமூகநலன், மாணவர் நலன் சார்ந்து கல்