Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-06-01-037
ISBN : 978-955-1857-36-3
EPABNo : EPAB/02/18572
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 480.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கல்வி முகாமைத்துவம் - முன்னெழு நோக்கும் முறைசார் சிந்தனா கூடங்களும்
  • அறிவு வளர்ச்சியும் - முகாமைத்துவச் சிந்தனைகளின் எழுகோலங்களும்
  • கல்வி முகாமைத்துவக் கோட்பாட்டு மாதிரிகைகள்
  • மனித வள முகாமைத்துவம்
  • விஞ்ஞான முகாமைத்துவம்
  • கல்வித் திட்டமிடல்
  • மனித வளத் திட்டமிடல்
  • நிறுவன ஒழுங்கமைப்பு நடத்தை
  • நெறிப்படுத்தலும் மேற்பார்வையும்
  • கல்விச் செயற்றொகுதியும் நிகழ்முனைப்பு ஆய்வும்
  • பணியாட்சி முறைமை
  • வினையாற்றல் குன்றியோரை முகாமை செய்தல்
  • முழுநிலைத் தர முகாமைத்துவம்
  • இலங்கையின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பு
  • கல்வியின் தரமேம்பாட்டு முகாமைத்துவம்
  • கலைச் சொற்கள்
Full Description (முழுவிபரம்):

கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான திறனாய்வு நிலைப்பட்ட நூல்களின் தேவை காலத்தின் பணிப்பாக எழுச்சி கொண்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் பயனுள்ள முயற்சிகள் பல நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
கோட்பாட்டு நிலையிலும் நடைமுறை நிலையிலும் எதிர்-கொள்ளப்படும் பிரச்சினைகளும், மாற்றுவகை நோக்கும் நூலின் உட்பொதிவில் அடங்கியுள்ளன. பெரும்பாலான முகாமைத்துவ நூல்கள் பல அடுக்குகள் கொண்ட கூம்பு வடிவிலான பாரம்பரியமான முகாமைத்துவ இயல்புகளைச் சிலாகித்துப் பேசியும், வினைத்திறன்களை சமூக மாற்றங்களோடு இணைத்து நோக்காது உள்ளதை மீள வலியுறுத்தும் வகையிலும் சித்திரிப்புக்களை மேற்கொள்ளும் நிலையில் மாற்றுவகைச் சிந்த-னைகளை வலியுறுத்தும் புலமை இயக்கங்கள் எழுச்சி கொண்டன.
கூம்புநிலை முகாமைத்துவத்தை மறுதலித்து தட்டை நிலை ஒழுங்கமைப்பை (குடயவ ழுசபயnளையவழைn) மார்க்சியம் வலியுறுத்தியது. மத்திய ஆதிக்க வலியுறுத்தலில் இருந்து ஓரங்களுக்குச் செல்லலைப் பின்னவீனத்துவம் வலியுறுத்தியது. இவை பற்றிய கருத்தாடலை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வலியுறுத்தும் நண்பர்கள் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், மதுசூதனன் மற்றும் சேமமடு பதிப்பகத்தினர் நன்றிக்குரியவர்கள்
சபா.ஜெயராசா