Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கலைத்திட்ட மாதிரிகைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-05-02-075
ISBN : 978-955-1857-74-5
EPABNo : EPAB/2/19272
Author Name (எழுதியவர் பெயர்) : கி.புண்ணியமூர்த்தி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 134
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 660.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கலைத்திட்டம்
  • கோட்பாடுகளும் கட்டமைப்புக்களும்
  • கலைத்திட்ட மாதிரிகள்
  • வீலரின் மாதிரிகை
  • கேரின் மாதிரிகை
  • ஸ்கில் பேக்கின் மாதிரிகை
  • ஹில்டா டபாவின் மாதிரிகை
  • டெனிஸ் லோட்டனின்மாதிரிகை
  • கலைத்திட்ட மாற்றங்களும் பிரச்சினைகளும்
  • 5நு மாதிரிகை
  • உசாத்துணை நூல்கள்
Full Description (முழுவிபரம்):

கல்வி தொடர்பாகவும், இந்து சமயம் தொடர்பாகவும் எனது பல கட்டுரைகள் வெளிவந்த போதும் இந்நூலே எனது கன்னி வெளியீடாகும். ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் கலைத்திட்டம் தொர்பான அறிவு இன்றிய மையாததாகும். இந்நூல் கலைத்திட்ட மாதிரிகளும் அம் மாதிரிகள் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்கத்திலும் விருத்தியிலும் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் ஆராய்கிறது.
பூரணமான கலைத்திட்ட மாதிரிகளை உள்ளடக்கித் தமிழில் போதிய நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. அக்குறைபாட்டை நிவர்;த்தி செய்வதாக இந்நூல் அமையும் என நினைக்கிறேன். கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்வி டிப்ளோமாப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்திசெய்வதாக  இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
கலைத்திட்டம் தொடர்பாகக் கற்றுக் கொள்ள விளையும் மாணவர்களுக்கப்பால் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்குனர்க ளையும், கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும்  பாடசாலை முகாமைத்துவத்தை வழிநடாத்திச் செல்லும் பாடசாலை அதிபர்களையும் இந்நூல் நிச்சயம் கவரும் என்பதுவும் எனது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாட்டில் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி எதிர்பார்த்த கல்வி இலக்கை அடைவதானால் பொருத்தமான கலைத்திட்ட மாதிரியைப் பயன்படுத்திக் கலைத்திட்டத்தை உருவாக்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அதனை முறையான விதத்தில் ஒழுங்கமைத்து நடைமுறைப் படுத்திச் செல்லவும் வேண்டும். ஒரு புதிய கலைத்திட்டத்தை உருவாக்குவதானால் அல்லது இருக்கின்ற கலைத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதானால் நடைமுறையில்  இருக்கும் கலைத்திட்டத்தின் குறைபாடுகளைக் கண்டறிதல் வேண்டும் இந்நூல் நடைமுறையிலிருக்கும் கலைத்திட்டத்தின் குறைபாடு களைச் சுட்டிக்காட்டுவதுடன் அவை எவ்வாறு சீர்திருத்தப்படுதல் வேண்டும் என்ற ஆலோசனைகளையும் முன்வைக்கிறது.
எனது 26 வருட ஆசிரிய வாழ்க்கையில் நான் பெற்ற நடைமுறை அனுபவங்களையும்  இந்நூலில்  ஊடாட விட்டுள்ளேன். பாடசா லைகளிலும் கல்வித் திணைக்களங்களிலும் கல்விக் கல்லூரிகளிலும் நான் பெற்ற அனுபவங்களே எனக்கு இந்நூலை ஆக்குவதற்குரிய உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியது. பல்வேறு யதார்த்த உண்மைகளையும் இந்நூலில் நான் தங்கு தடையின்றி வெளிப்படுத் தியுள்ளேன்.          
இந் நூலை உருவாக்குவது தொர்பாக எனக்கு ஆலோச னைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய 'அகவிழி' சஞ்சிகை ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்நூலுக்கு முன்னுரை வழங்கி நூலுக்கு கனதி சேர்த்திருக்கும் எனது ஆசான் பேராசிரியர் சபா.ஜெயராசாவுக்கும் நன்றிகள். அத்துடன் இந்நூலை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பாளர் திரு.சதபூ. பத்மசீலனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலுக்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பே எனது எதிர்கால ஆக்கங்களுக்கு  அத்திவாரமாக அமையும் எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன் இந் நூலால் பயனடையவும் வாழ்த்துகிறேன். 
 கி.புண்ணியமூர்த்தி

 

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கலைத்திட்ட மாதிரிகைகள்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 204
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 600.00
Edition (பதிப்பு): 2ம் திருத்திய பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கலைத்திட்டம்
  • கோட்பாடுகளும் கட்டமைப்புக்களும்
  • கலைத்திட்ட மாதிரிகள்
  • வீலரின் மாதிரிகை
  • கேரின் மாதிரிகை
  • ஸ்கில் பேக்கின் மாதிரிகை
  • ஹில்டா டபாவின் மாதிரிகை
  • டெனிஸ் லோட்டனின்மாதிரிகை
  • கலைத்திட்ட மாற்றங்களும் பிரச்சினைகளும்
  • 5நு மாதிரிகை
  • உசாத்துணை நூல்கள்
Full Description (முழுவிபரம்):
 
ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வருக்கும் கலைத்திட்டம் தொடர்பான அறிவு இன்றியமையாத தாகும். இந்நூல் கலைத்திட்டத்தின் ஒழுங்கமைப்பு, உள்ளடக்கம், கலைத்திட்ட மாதிரிகைகளின் அமைப்பு, இலங்கையின்  கல்விச் சீர்திருத்தங்களில் கலைத்திட்ட மாதிரிகைகள் செலுத்தியுள்ள செல்வாக்குகள் என்பன தொடர்பாக ஆராய்கின்றது. ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' நூலில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வேறு சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே வெளிவந்த 'கலைத்திட்ட மாதிரிகைகள்' 2010 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும். இந் நூல் சந்தையில் முழுமையாக முடிவடைந்ததன் காரணமாகவும் இந்நூலை மீண்டும் பதிப்பிக்குமாறு பல மட்டங்களில் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவுமே இத் திருத்திய பதிப்பு வெளியிடப்படுகின்றது. இந்நூல் தற்காலக் கல்விச்சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானவாறு இற்றைப்படுத்தப் பட்டுள்ளமை முக்கிய விடயமாகும். 
கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக்கல்வி டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்விமுகாமைத்துவ டிப்ளோமாப் பாடநெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக  இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
இன்று கலைத்திட்டம் தொடர்பான தேடல்கள் பல்வேறு உயர் கல்வி மட்டங்களில் வியாபித்துக் காணப்படுகின்றன. இதன் முந்திய பதிப்பு தேசிய கல்விக் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் பெரு வரவேற்பைப் பெற்றமை எனக்குப் பாரிய தூண்டுதல்களாக அமைகின்றது. 
எனது 32 வருட ஆசிரிய வாழ்க்கையில் நான் பெற்ற நடைமுறை அனுபவங்களையும்  இந் நூலில்  ஊடாடவிட்டுள்ளேன். பாடசாலைகளிலும் கல்வித் திணைக்களங்களிலும் கல்விக் கல்லூரிகளிலும் நான் பெற்ற அனுபவங்களே எனக்கு இந்நூலை ஆக்குவதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. 
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆசான், பேராசிரியர் சோ. சந்திரசேகரம்  ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் இந்நூலை மீள உருவாக்குவது தொடர்பாக எனக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய 'ஆசிரியம்' சஞ்சிகை ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்நூலை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பாளர் திரு.சதபூ.பத்மசீலனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலுக்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பே எனது எதிர்கால ஆக்கங்களுக்கு  அத்திவாரமாக அமையும் எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன் இந்நூலால் பயனடையவும் வாழ்த்துகிறேன். 
 
கி.புண்ணியமூர்த்தி
சிரேஷ்ட ஆசிரிய கல்வியியலாளர்
தேசிய கல்விக் கல்லூரி
மட்டக்களப்பு