Sinnaththamby, M | |
மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன. |
மா.சின்னத்தம்பி புத்தகங்கள் | |
2009 - நிர்வாகவியல் - பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை | |
2009 - கல்வியியல் - ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல் |