புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்

சைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. 
    சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
    சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்
    சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்
    சைவம் சிவானந்தம் சாயுச்சியமே
இப்பாடலிற் 'சிவம்', 'உயிர்' என்ற இருபொருட் கலப்பு 'சைவம்' எனப்படுகிறது. சிவம் அறியும் முறை, சைவம் அடையும் முறை. அதிலும் சிவத்தை அறிந்த பின்னர் அடையும் முறையே சைவம். மேற்கூறப்பட்ட பாடலின் 3ஆம் அடியில் இருவகைக் கலப்புக் கூறப்படுகிறது. சிவமானது உயிரைச் சார்வது ஒருமுறை, சிவன் உயிரைச் சாராது நிற்றல் இன்னொரு முறை. இங்கு உயிர் சிவத்தை அறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் என்பது கேவலநிலை. இந்நிலையில் இறைவன் உயிரினுட் தன்னுடைய பெருமைகளை எல்லாம் உள்ளடக்கி, உயிரின் அறிவு, இச்சை, செயல் மேற்பட்டு விளங்குமாறு தாம் அவற்றின் உள்ளடங்கி நின்று, அவ்வுயிருக்கு உதவி செய்யும் முறை கூறப்பட்


அகளங்கன்
Akalangan

பண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர். தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர். 

 
தேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச, அரச சார்பற்ற சமூக, சமய நிறுவனங்களின் தேசிய விருதுகளையும், பரிசுகளையும், பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா.வன்னியின் மைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்துவதை பெருமையாக கொள்பவர்.  வன்னி மக்களின் கல்விப் பயணத்திற்கு தினம் அரும்பாடுபட்டுக் கொண்டு தன்னை முழு