Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் சாட்சியாக அமைகின்றது. 
இந்நூல் கந்தப்புராண ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது. என்பதிற் கருத்து வேறுபாடிருக்க முடியாது. இந்நூல் கந்தப்புராண கலாசாரத்தின் மைற்கல்லாக நின்று எமது பண்பாட்டுப் பயணத்துக்குப் பாதை காட்டுமென உறுதியாக நம்புகிறேன். 

 

செ.சிவலிங்கம் புத்தகங்கள்
2011 - புராணநூல் - கந்தபுராணச் சுருக்கம்