இளம்வளர்ந்தோர் இலக்கியம்
|
இளம் வளர்ந்தோர் இலக்கியம் (லுயடவைநசயவரசந) சமகால இலக்கியத் துறையில் அதிக முக்கியத்துவத்தை எட்டத் தொடங்கியுள்ளது. பெருந்தொகையான புனைகதை மற்றும் புனைகதை சாரா நூல்கள் இத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளிலே வெளிவந்த வண்ணமுள்ளன. தனித்துவமான திறனாய்வு முயற்சிகளும் எழுகோலம் பெற்று வருகின்றன.
இளைஞர் நலன்களை மேம்படுத்தும் வகையில் அரச திணைக்களங்களும், மன்றங்களும், தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் சமூக மாற்றங்களில் அவர்களது பங்கெடுப்பும், ஆயுதப் போராட்டங்களில் ஈடுபாடும் கல்வியியலாளரதும் சமூகவியலாளரதும் ஊன்றிய கவனத்தைப் பெற்று வருகின்றன.
இளைஞர்களை ஆற்றுப்படுத்தலும் அவர்களின் ஆக்க மலர்ச்சியை வெளிக்கொண்டு வருதலும், உடனடித் தேவைகளாக மேலெழுகின்றன. சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் துலங்குவோராய் இளைஞர்கள் இருத்தலினால் அவர்கள் மீதான கவனமே மேலோங்கத் தொடங்கியுள்ளது.
சபா.ஜெயராசா
|