புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கந்தபுராணச் சுருக்கம்

'ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தபுராணத்திற்குப் பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுருக்கி செய்யுளாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகிலே வைத்த ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் 'ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தபுராணம் என்னுங் கடலை இலகுவாக கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராண சுருக்கம்' என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதைக் கலை வைத்தவர் என்பதற்கு இந்நூல் காட்சியாக அமைகின்றது. 
இந்நூல் கந்தப்புராண ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதிற் கருத்து வேறுப்பாடிருக்க முடியாது. இந்நூல் கந்தப்புராண கலாசாரத்தின் மைற்கல்லாக நின்று எமது பண்பாட்டு பயணத்திற்குப் பாதை காட்டுமென உறுதியாக நம்புகிறேன்.' 

 


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார