Full Description (முழுவிபரம்): |
நவீன கல்வி முறைமையோடு இணைந்த தொழிற்பாடாகத் தொடர் தொழில் வழிகாட்டல் அல்லது ஆற்றுப்படுத்தல் அமைந்து வருகின்றது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றித் தொழில் நிறுவனங்களும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.
மனித வளத்தை உச்ச நிலையிலே பயன்படுத்திக் கொள்வதற் கும் தொழிற் சோர்வை நீக்கி தொழில்சார் உளநிறைவை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கும் வளமுள்ள வழிகாட்டல் வேண்டப்படுகின்றது.
வழிகாட்டுனர் மேலாதிக்க நிலையிலிருந்து செயற்பாடுகளை முன்னெடுத்தல் தவறானது. மாணவரின் உளச்சார்பு மற்றும் தனித்து வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்காது, உறுவளஞ்செய்யும் நிலையிலிருந்தே வழிகாட்டலைத் தருதல் வேண்டும்.
வழிகாட்டல் என்பது உளவியல் மயப்பட்ட ஒரு செயற்பாடு என்பதை மறந்துவிடலாகாது. அதேவேளை தொழிற்கட்டமைப் புக்களோடு இணைந்துள்ள வர்க்க சார்புடைமையை அறிகை நிலையிற் புலப்படுத்துதலோடும் வழிகாட்டலை முன்னெடுத்தல் சமூக நீதியாகின்றது.
வழிகாட்டல் ஒரு புலமைப்பயிற்சியாக மட்டும் அமைதல் இல்லை. அது சமூக நீதியுமாகின்றது. அது எந்த வர்க்கத் தளத்திற் செயற்படுகின்றது என்பது மிகமுக்கியமானது.
சபா.ஜெயராசா
|