யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும்
|
பெண் இனம் அனுபவிக்கும் அதிகளவான உரிமைகள் பலவகையான போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட வையே. பெண் இனத்தின் செயற்பாடுகள் பொதுவாக ஒரு சமூகத்தி னால் பின்பற்றப்பட்டு வருகின்ற கலாசாரம், சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள், சமூக விழுமியங்கள் போன்ற பல கூறுகளால் சூழப்பட்டுக் கட்டுப்பாடுகளுடனேயே இடம்பெற் றுள்ளன. இந்தவகையிலே கல்வி கற்கும் உரிமைக்காகவும் பெண்கள் பல தடைகளைத் தாண்ட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டமையை வரலாற்று ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்கள் தமது வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய வலுவான ஆயுதம் கல்வியே என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். கல்வியே தமது முன்னேற்றத்திற்கான வலுவான ஆயுதம் என் பதைப் பெண் இனம் என்று உலகநாடுகளில் உணரத் தலைப்பட் டதோ அந்தக் காலகட்டத்திலேயே யாழ்ப்பாணத்துப் பெண்களும் அதனை உணர்ந்து கொண்டனர். பண்டைய காலம்தொட்டு யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது கல்வி அறிவினை மேம்படுத்து வதற்காகப் பல்வேறு படிகளைக் கடந்து வந்தனர் என்பதை மறுக்க முடியாதுள்ளது. பண்டைய யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது கல்வி வளர்ச்சிக்காக நடந்து வந்த பாதையை இன்றைய சமூகத் திற்கு குறிப்பாகப் பெண் இனத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உணரப்பட்டமையே இவ் ஆய்வுக்கட்டுரைக்கான அடிப்படை உந்துதலாக அமைந்தது.
'யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பண்டைய காலம் தொடக்கம் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம் வரையிலான காலப்பகுதிகள் வரலாற்று ரீதியாகக் கவனத்தில் எடுக்க
|