கலைத்திட்ட மாதிரிகைகள்
|
கல்வி தொடர்பாகவும், இந்து சமயம் தொடர்பாகவும் எனது பல கட்டுரைகள் வெளிவந்த போதும் இந்நூலே எனது கன்னி வெளியீடாகும். ஆசிரியத் துறையில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் கலைத்திட்டம் தொர்பான அறிவு இன்றிய மையாததாகும். இந்நூல் கலைத்திட்ட மாதிரிகளும் அம் மாதிரிகள் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்கத்திலும் விருத்தியிலும் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் ஆராய்கிறது.
பூரணமான கலைத்திட்ட மாதிரிகளை உள்ளடக்கித் தமிழில் போதிய நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. அக்குறைபாட்டை நிவர்;த்தி செய்வதாக இந்நூல் அமையும் என நினைக்கிறேன். கல்விக் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆசிரிய பயிலுனர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்விமாணிப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், பட்டப்பின்படிப்புக் கல்வி டிப்ளோமாப் பாட நெறியைப் பின்பற்றும் மாணவர்கள், கல்வி முதுமாணி, ஆசிரிய கல்வியில் முதுமாணிப் பாடநெறிகளைப் பின்பற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரது கல்வித் தேவைகளையும் பூர்த்திசெய்வதாக இந்நூல் அமையும் எனக் கருதுகிறேன்.
கலைத்திட்டம் தொடர்பாகக் கற்றுக் கொள்ள விளையும் மாணவர்களுக்கப்பால் இலங்கையின் கலைத்திட்ட உருவாக்குனர்க ளையும், கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும் பாடசாலை முகாமைத்துவத்தை வழிநடாத்திச் செல்லும் பாடசாலை அதிபர்களையும் இந்நூல் நிச்சயம் கவரும் என்பதுவும் எனது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாட்டில் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வ
|