புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்

மெய்யியல் கற்கைப்புலம் மிக அகலமானதும் ஆழமானதும் ஆகும். ஏனைய துறைகளுள்ளும் புகுந்து நின்று கோலோச்சும் துறையிது. இந்திய - இந்து மெய்யியற் கற்கைப் புலத்தில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளமையைப் பேறெனக் கருதலாம். மரபுவழிக் கல்வியாளர்களிடமும் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிக, மெய்யியற்துறைகளின் புலமைத்துவம் சார் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடமும் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் வழி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நா.ஞானகுமாரன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 'சைவசித்தாந்த, காஷ்மீரசைவ மெய்யியலமைப்பு - ஓர் ஒப்பீட்டாய்வு' எனும் தலைப்பில் முதுதத்துவமாணி கற்கை நெறியை மேற்கொண்டு அதனை நிறைவு செய்தேன். அவ்வாய்வும் அதன் வழி பெற்ற அறிவையும் அடிப்படையாகக் கொண்டு 'காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்' எனும் இந்நூல் வெளிவருகின்றது.
இந்திய தேசமெங்கும் பரவியிருந்த சைவம் பெருஞ்சமயமாக - தத்துவமாக அமையும் விதத்தில் தன் கட்டமைவுகளைத் தக்கவைத்துக் கொண்டது. அந்த வகையில் காஷ்மீரத்தில் நிலவிய ஒருமைவாத சைவத்தையும் தமிழ்நாட்டில் நிலவிய பன்மைவாத சைவசித்தாந்தத்தையும் ஒப்பிடுவதாக இந்நூல் அமைகிறது. அதேவேளை காஷ்மீரத்தில் சத்தியஜோதி உள்ளிட்டோரால் பன்மைவாத சைவமான சைவசித்தாந்தம் நிலைப்படுத்தப்பட்டதையும் அதற்கான நூல்களாக அஷ்டப்பிரகரண நூல்கள் திகழ்கின்றன என்பதையும் அறிய முடிகிறது. அத்தோடு காஷ்மீர சைவத்தின் முக்கியஸ்தரான அபிநவகுப்தரின் குரு சம்புநாதர், அர்த்த திரியம்பக சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்; அவரின் குருவும் பரமகுருவும் முறையே சோமநாதரும் சுமத


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார