அபிவிருத்தியின் சமூகவியல் |
பொருளியல் என்னும் கல்வித்துறையில் இருந்து கிளைத்த கல்வித்துறையாக 'அபிவிருத்திக் கல்வி' (னுநஎநடழிஅநவெ ளுவரனநைள) என்னும் துறை விளங்குகிறது. இது ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலவரலாற்றை உடையது; பொருளியல், புவியியல், சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 'அபிவிருத்தியின் சமூகவியல்' அபிவிருத்தி பற்றிய பொருளியல் கோட்பாடுகளின் சமூகவியல் அம்சங்களிற்கு அழுத்தம் தரும் வகையில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் தலைப்பு தமிழிற்குப் புதியது. முதலாவது கட்டுரை அபிவிருத்தி சிந்தனையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைப்பது. அபிவிருத்திச் சிந்தனையை பின்வரும் மூன்று முக்கிய செல்நெறிகளாக அல்லது நோக்கு முறைகளாக இக்கட்டுரை பிரித்துக் காட்டி விளக்கம் தருகிறது. |