இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள் |
'இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்' எனும் இந்நூல் பல்வேறு காலப்பகுதிகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவருகின்றது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் அதுவும் பெருமளவுக்கு நவீன காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்நூல் பேசுகின்றது. அவ்வாறான கருப்பொருட்களாக இலங்கையில் தேசக்கட்டுமானம், இலங்கைத் தமிழர் தேசியவாதம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், இருபதாம் நூற்றாண்டு இலங்கையில் இந்துமதத்தின் வளர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள், பிரித்தானியர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட ஈழத்தமிழரின்அடையாளங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் என்பன அமைந்துள்ளன. |