Book Type (புத்தக வகை) : மெய்யியல்
Title (தலைப்பு) : இந்திய அறிவாராய்ச்சியியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : 2017-07-01-152
ISBN : 978-955-685-051-2
EPABNo : EPAB/2/19296
Author Name (எழுதியவர் பெயர்) : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 210
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 600.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):
அத்தியாயம் - ஒன்று 01
1.0 அறிவாராய்ச்சியியலுக்கோர் அறிமுகம் 01
1.1 அறிமுகம் 01
1.2 மேலைத்தேய அறிவாராய்ச்சியியல் 03
1.3 இந்திய அறிவாராய்ச்சியியல் 16
1.4 இந்திய அறிவாரய்ச்சியியலில் பிரமாணங்கள் 37
 
அத்தியாயம் - இரண்டு 43
2.0  காட்சிப் பிரமாணம் 43
2.1.  அறிமுகம் 43
2.2.  வேதாந்தத்தில் காட்சி 46
2.3.  நியாய தரிசனத்தில் காட்சி 70
2.4.  சைவசித்தாந்தத்தில் காட்சி 84
2.4.1. வாயிற் காட்சி 92
2.4.2. மானதக் காட்சி 94
2.4.3. தன்வேதனைக் காட்சி 96
2.4.4. யோகக் காட்சி 97
2.5. காட்சிப் போலிகள் 100
அத்தியாயம் மூன்று 103
3.0. அனுமானப் பிரமாணம் 103
3.1. நியாய தரிசனத்தில் அனுமானம் 106
3.2. பௌத்தத்தில் அனுமானம் 114
3.3. சைவசித்தாந்தத்தில் அனுமானம் 125
3.4 அனுமானப் போலிகள் 130
அத்தியாயம் - நான்கு 135
4.  ஆகமப் பிரமாணம்
அத்தியாயம் - ஐந்து 143
5.  ஒப்புவமைப் பிரமாணம்
அத்தியாயம் -ஆறு 154
6.  அர்த்தாப்பத்திப் பிரமாணம்
அத்தியாயம் - ஏழு 167
7. அனுப்பலத்திப் பிரமாணம்
அத்தியாயம் - எட்டு 184
8.  ஏனைய பிரமாணங்கள்
9. உசாத்துணை நூல்கள் - 1 ஆங்கிலம் 189
                        11  தமிழ்     195
Full Description (முழுவிபரம்):
மனிதவாழ்வின் அனைத்து முகங்களிலும் அறிவு வியாபித்துள்ளது. அதன் பரிமாணங்களை, முறையியல்களை, அவைசார்ந்த விமர்சனங்களை ஆய்ந்தறியும் துறையாக அறிவாராய்ச்சியல் வாய்த்துள்ளது. உலகளாவிய அறிவுத் திரள்களின் வேர்களைத்தேடும் இந்தப் பயணத்தில் பண்பாட்டுப் பன்மை நோக்கின் அவசியம் இன்று பெரிதும் உணரப்படும். இந்தவகையில் சுதேச அறிவின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் தேடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உண்மையில் அறிவாராய்ச்சியியலின் வித்துக்கள் கீழைத்தேய சிந்தனைகளி னூடாகவே செழுமைகண்டுள்ளமை வரலாறாகும். ஈழத்திலே இந்த கீழைமரபின் வித்துக்கள் ஞானப்பிரகாச முனிவரின் பிரமாண தீபிகையின் வரவுடன் வேர்விடக் காணலாம்.  இத்தகைய சூழமைவிலேயே கீழைத்தேய அறிவாராய்ச்சியியல் பற்றிய புரிதலுக்கான வழித்துணையாக பேராசிரியர் நா.ஞானகுமாரனின் இந்திய அறிவாராய்ச்சியல் வரவாகின்றமை மகிழ்ச்சி தருகின்றது. 
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற மகுட வாசகத்துடன் பண்பாட்டின் செழுங்கலை நியமமாக விளங்குவது எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அதன் மெய்யியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானகுமாரன். சைவசித்தாந்தம் உட்பட கீழைமெய்யியல் பற்றிய தாடனத்துடன் ஏற்கனவே உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உகந்த நூல்களைத் தந்தவர். பேராசிரியரின் இந்நூலானது இந்திய மெய்யியலின் பிரமாணங்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்திய அறிவாராய்ச்சியிலின் ஆதார சுருதியாக அறிவினைப் பெறும் வழிமுறையாக விளங்கும்  அறிவின் வாயில்களே இப்பிரமாணங்கள். தமிழ் மரபில் அளவைகள்  என இவை  வழங்கப்படுகின்றன. இந்திய மெய்அறிவியல் புலத்தில் இப்பிரமாணங்களின் பயன்பாட்டினை, பன்மைச் சமய ஒப்புமை நோக்கில் இந்நூல் விளக்கிநிற்கின்றது. 
இந்திய அறிவாராய்ச்சியல் என்ற பொருண்மையானது இந்திய மரபின் தனித்துவமான கோலங்கள் பலவற்றினை வெளிப்படுத்தி நிற்பது. இவற்றுக்கான ஊற்றுக்களையும் அதன் வழியான வேர்களையும் இனங்காணுதல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக ஆங்காங்கே தமிழர் சிந்தனை மரபின் வெளிப்பாடுகளாக இந்நூல் வெளிச்சமிடும் ஆதாரங்கள் பற்றிய விரிவான தேடல்கள் இன்றியமையாதன. இந்தவகையில்,
'காண்டல் கருதல், உவவம், ஆகமம் 
அருத்தா பத்தியோடு இயல்பு
ஐதிகம், அபாவம், மீட்சி யொளிவறிவு 
ஏய்தி உண்டாம் நெறி என்றிவை தம்மாற் 
பொருளின் உண்மை புலங்ககொளல் வேண்டும்'
என மணிமேகலை பேசும் அளவையியல் நியமங்கள் தமிழர் சிந்தனை மரபில் அறிவாராய்ச்சியல் ஊற்றுக்களாகக் கருதப்படுவன. இவ்வண்ணமே திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்களிலும் பேசப்படும் அறிவு பற்றிய கருத்தாக்கங்கள் கவனத்திற்குரியன. அறிவு பற்றிய உரையாடலோடு அறிவறிவு என்ற சொற்றொடரின் மூலம் அறிவுக்கோட்பாட்டில் எழுகின்ற சிக்கல்களையும் திருக்குறள் விளக்கிநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறே அறிவின் நிலைபேற்றுக்கான சமூக உண்மையினைத் தெளிவாக சங்க இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கக் காணலாம். 'அறிவு வாயில்கள் எனக் குறிப்பிடப்படும் ஐம்பொறிகள் சிறப்பாக இருந்தும் பயனில்லை அவற்றினைப் பயன்படுத்தி அறிவு பெறுதற்கு வறுமையற்ற வாழ்க்கை அமையவேண்டும்' எனத் தெளிவாக குறிப்பிடுவார் பெருங்குன்றூர் கிழார். கிழாரின் கருத்தாக்கம் அறிவின் சமூகவியலுக்கு எங்களை இட்டுச் செல்லும். இயற்கை விஞ்ஞான முறையியல்களை அப்படியே பிரதி எடுத்து புறவயமான விஞ்ஞான உண்மைகள் என்ற புலனறிவாத அளவைகளைத் தாண்டி இன்று அகவயமான, தோற்றப்பாட்டியல் போன்ற முறைகளையும் தன்னகத்தே கொண்டு வளர்ச்சி கண்டுள்ள சமூகவியல் அனுபவத்திடை இன்றைய கால அறிவின் பன்மைப்;போக்கினை உணர்ந்துகொள்ளலாம்.  இவ்வாறே மானுடவியல், மெய்யியல், அறிகை உளவியல், இனவரைவியல் போன்ற துறைகளில் இன்று ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களின் இயக்க விசையாகவும் அறிவாராய்ச்சியியலின் பன்மைத்துவ அணுகு முறையினைத் தரிசிக்கலாம்.
மனிதனின் அனுபவ எல்லைகள் விரிய விரிய அறிதல் சார்ந்த முறையியல்களிலும் மாற்றங்கள் வேண்டப்படுகின்றன. அறிதலை மதிப்பிடும் அளவுகோள்களிலும் கூட புதிய ஏற்பாடுகள் வேண்டப்படுகின்றன. நவீன அறிவியலின் வழிப்பட்டது என்ற பெயரில் சுதேசிய பண்பாட்டுத் தளங்களின் செழுமையை மறுக்கும் ஐரோப்பிய அறிவுவாதம் போன்றவற்றிற்கு அப்பால் பல்லாண்டுகால பண்பாட்டுப் பெறுமதிகளை, அடையாளங்களை, கூட்டு ஞாபகங்களை வெளிக்கொணர்ந்து அறிவின் ஆத்மாவைக் காப்பது எங்கள் கால கடமையாகும். 
பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்
முன்னாள் துணைவேந்தர் 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்