புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இந்திய அறிவாராய்ச்சியியல்

மனிதவாழ்வின் அனைத்து முகங்களிலும் அறிவு வியாபித்துள்ளது. அதன் பரிமாணங்களை, முறையியல்களை, அவைசார்ந்த விமர்சனங்களை ஆய்ந்தறியும் துறையாக அறிவாராய்ச்சியல் வாய்த்துள்ளது. உலகளாவிய அறிவுத் திரள்களின் வேர்களைத்தேடும் இந்தப் பயணத்தில் பண்பாட்டுப் பன்மை நோக்கின் அவசியம் இன்று பெரிதும் உணரப்படும். இந்தவகையில் சுதேச அறிவின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் தேடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உண்மையில் அறிவாராய்ச்சியியலின் வித்துக்கள் கீழைத்தேய சிந்தனைகளி னூடாகவே செழுமைகண்டுள்ளமை வரலாறாகும். ஈழத்திலே இந்த கீழைமரபின் வித்துக்கள் ஞானப்பிரகாச முனிவரின் பிரமாண தீபிகையின் வரவுடன் வேர்விடக் காணலாம்.  இத்தகைய சூழமைவிலேயே கீழைத்தேய அறிவாராய்ச்சியியல் பற்றிய புரிதலுக்கான வழித்துணையாக பேராசிரியர் நா.ஞானகுமாரனின் இந்திய அறிவாராய்ச்சியல் வரவாகின்றமை மகிழ்ச்சி தருகின்றது. 
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற மகுட வாசகத்துடன் பண்பாட்டின் செழுங்கலை நியமமாக விளங்குவது எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அதன் மெய்யியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானகுமாரன். சைவசித்தாந்தம் உட்பட கீழைமெய்யியல் பற்றிய தாடனத்துடன் ஏற்கனவே உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உகந்த நூல்களைத் தந்தவர். பேராசிரியரின் இந்நூலானது இந்திய மெய்யியலின் பிரமாணங்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்திய அறிவாராய்ச்சியிலின் ஆதார சுருதியாக அறிவினைப் பெறும் வழிமுறையாக விளங்கும்  அறிவின் வாயில்களே இப்பிரமாணங்கள். தமிழ் மரபில் அளவைகள்  என இவை  வழங

மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.