புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வித் தத்துவம்

'கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் வாக்கு. மக்களுக் குரிய வீரவாழ்க்கை - பெருமித வாழ்க்கையை கொடுக்கும் நான்கினுள் ஒன்று கல்வி. அக்கல்வி கரையிலது; ஆனாற் கற்பவர் நாட்சிலது. ஆகையாற் கற்பவை கற்பதற்கு ஆசான்துணை இன்றியமையாதது. அத்துடன் இளமையிற் கற்கும் சிறார்க்கு ஆசிரியர் உதவி அத்தியாவசிய மானதாகும். 
ஆசான், தான் கற்பிக்கும் பாடத்தில் மட்டும் வல்லவனாக இருந்தாற் போதாது. பாடத்தைப் போதிக்கும் முறையிலும் தேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். மேலும், சிறந்த ஆசிரியன் கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிட் டால் இன்றியமையாதது. ஏனெனில் தன் மாணாக்கர்களை  'உயர் நிலைக்கு உய்விப்பானே' சிறந்த ஆசானாவான். ஆகையால் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த கல்வியை மட்டும் பெற்றிருந்தாற் போதும் என்று அமையாது, ஆசிரியத் தொழிலுக்குரிய பயிற்சியையும் பெற்றுத் தம்மைத் தொழிற்றகைமையுடையவர்களாக ஆக்கிக்கொள்ளல் வேண்டும். 
கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளல், ஆசிரிய தொழிற் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாக இன்று விளங்குகின்றது. இதிற் கல்வித் தத்துவம் என்கின்ற கல்வி மொழியியலும் உள்ளடங்கும். 
'கல்வித்தத்துவம்' என்னும் இந்நூற் கல்வித்தத்துவம் பயில்வோருக்குப் பயன்படக்கூடும். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கும் அமைய எழுதப்பெற்ற நூலன்று. பாடநூலாகவோ அல்லது கல்வித்தத்துவம் புகட்டும் ஆசிரியர்களது கைந்நூலாகவோ அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப் பெற்றதுமன்று. இந்நூலை யான


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி