கடியாரத்தின் கதை
அது மழைக் காலம்.
கரிய முகில் படர்ந்திருந்தது.
சூரியனைக் காண முடியவில்லை.
இருளாக இருந்தது.
'இப்போ என்ன நேரம்' என்று அம்மா கேட்டார்.
எங்களிடம் இரண்டு கடியாரங்கள் இருந்தன.
ஒன்று முட்களில்லாக் கடியாரம்.
அது எண் வடிவில் நேரத்தைக் காட்டியது.
அப்போது நேரம் எட்டுமணி.
மற்றையது முட்கள் கொண்ட கடியாரம்.
சிறிய முள் ஒன்றும் பெரிய முள் ஒன்றும் அதில் இருந்தன.
முட்களைக் கைகள் என்றும் கூறுவர்.
அப்போது சிறிய முள் எட்டில் நின்றது.
பெரிய முள் பன்னிரண்டில் நின்றது.
நேரம் எட்டுமணி.
பெரியமுள் கடியாரத்தைச் சுற்றி வர ஒரு மணி நேரமாகும்.
சிறிய முள் ஒருமுறை சுற்றி வர பன்னிரண்டு மணித்தியாலம் எடுக்கும்.
அப்போது அக்கா அங்கு வந்தார்.
'இருள் வரும்.
ஒளி வரும்.
மழை வரும்.
பனி வரும்.
ஆனால் கடியாரம் உள்ளபடி ஓடிக் கொண்டேயிருக்கும்' என்றார்.
கடியாரம் ஓடியது.
'ரிக் ரிக்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது.
|