Book Type (புத்தக வகை) : சமய நூல்
Title (தலைப்பு) : சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-04-01-009
ISBN : 978-955-1857-08-0
EPABNo : EPAB/2/19264
Author Name (எழுதியவர் பெயர்) : ஏ.என்.கிருஷ்ணவேணி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • முன்னுரை
  • பதிப்புரை
  • இந்திய தத்துவம்: ஓர் அறிமுகம்
  • சைவ சித்தாந்த அறிவாராய்ச்சி
  • திருமுறைகளிற் சைவசித்தாந்தம் 
  • சிவஞானபோதம் விளக்கும் தத்துவம் 
  • ஆணவம், கன்மம் பற்றிய கருத்துக்கள்
  • சைவசித்தாந்தத்திற் சீவன் முத்திக் கொள்கை
  • சைவ நாற்பாதங்கள்
  • அத்துவைதத்திலும் சைவசித்தாந்தத்திலும் மாயைக் கோட்பாடு 
  • உசாத்துணைகள்
Full Description (முழுவிபரம்):

சைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. 
    சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
    சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்
    சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்
    சைவம் சிவானந்தம் சாயுச்சியமே
இப்பாடலிற் 'சிவம்', 'உயிர்' என்ற இருபொருட் கலப்பு 'சைவம்' எனப்படுகிறது. சிவம் அறியும் முறை, சைவம் அடையும் முறை. அதிலும் சிவத்தை அறிந்த பின்னர் அடையும் முறையே சைவம். மேற்கூறப்பட்ட பாடலின் 3ஆம் அடியில் இருவகைக் கலப்புக் கூறப்படுகிறது. சிவமானது உயிரைச் சார்வது ஒருமுறை, சிவன் உயிரைச் சாராது நிற்றல் இன்னொரு முறை. இங்கு உயிர் சிவத்தை அறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் என்பது கேவலநிலை. இந்நிலையில் இறைவன் உயிரினுட் தன்னுடைய பெருமைகளை எல்லாம் உள்ளடக்கி, உயிரின் அறிவு, இச்சை, செயல் மேற்பட்டு விளங்குமாறு தாம் அவற்றின் உள்ளடங்கி நின்று, அவ்வுயிருக்கு உதவி செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. இரண்டாவது முறை, சுத்த நிலை எனப்படும். இங்கு உயிரானது எப்பொழுதும் சிவன் தன்னுள் வந்து சாராதவாறு, தனக்குத் தன்முனைப்பு ஏற்படாத-வாறு தன்னைக் காத்துத் தான் சிவத்தை அறிந்து, சிவத்தின் வியா-பகத்துள் தன்னை ஒடுக்கிக்கொண்டு சிவம் ஆற்றும் செயல் வழியே தன் வலியெலா மடங்க நின்று சிவவயத்ததாய்த் தொழிற்-படுதல் கூறப்படுகிறது. உயிர் சிவத்தோடு அனுபவக் கலப்பை மேற்கொண்டு நிற்றல் சைவக் கலப்பாகும். சைவக் கலப்பில் உயிர் தன்னை அறிந்தே சிவத்தைச் சாருதல் உண்டு. அவ்வகையில் அறிந்து அனுபவித்து முடிந்தபின் உலகவர் நன்மைக்காக அவ்-வனுபவ உண்மையை வெளிப்படுத்தும்போது உயிரிடம் தொழிற்படுவது சைவசித்தம் ஆகும். சைவசித்தம் தந்த அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தும் தெளிந்த கொள்கையே சைவசித்-தாந்தம் என்பதன் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும். என்-பதே திருமூலர் தரும் விளக்கம். எனவே இறை அனுபவத்திற் திளைத்த ஞானிகள் வெளிப்படுத்திய கொள்கைகளே சைவ சித்தாந்தம் எனக் கொள்ள வேண்டும் சமய வாழ்வில் ஈடுபட்டு, இறை அனுபவத்தைப் பெற்று உய்யும் வழியைக் கூறுவது சைவசித்-தாந்தம். அது பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மை பற்றிப் பேசுகிறது. இறைவன் முப்பொருட்களிலும் மேலான தலைவன் என்ற காரணத்தாற் பதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மாக்கள் அநாதியாகவே பாசங்களினாற் பந்திக்கப்பட்டவை என்ற காரணத்தினால் அவை பசு என்று அழைக்கப்படுகின்றன. ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களும் ஆன்மாக்-களைப் பந்திப்பதன் காரணமாகப் பாசம் என்ற பெயரைப் பெறு-கின்றன. எனவே பாசங்களில் இருந்து விடுபட்டுப், பதியாகிய தலைவனது தாளினை அடைதலே ஆன்மாக்களின் உயர் இலட்சி-மாகும். அந்த வகையில் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்ற சைவ சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்-வகை மார்க்கங்களைப் பின்பற்றி, இவ்வுலகிலேயே வாழுங் காலத்திலேயே முத்தி கைவரப்பெற்றுப் பின்னர் உடலில் இருந்து விடுபட்ட நிலையில் விதேகமுத்தி பெறுவர். சைவ சித்தாந்தம் உயிர்கள் வாழும் நெறியைக் கூறி அவ்வாழ்க்கை அனுபவத்தினூடு பெறும் விடுதலையைக் கூறுவதன் மூலம் மெய்ப்பொருளை விளக்கும் தத்துவமாகவும், மக்கள் அனுஷ்டிக்கத்தக்க சமய நெறி-யாகவும் விளங்குகிறது. இக்கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் இச்சிறுநூல் அமைந்துள்ளது. 
இந்நூல் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்கா துரந்தரி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 83 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுப் பயன்பெறும் வகையில் வெளியிடப்படு-கிறது. அன்னை அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் நாம் பெற்ற சிறிய அனுபவத்தினூடாக இந்நூலினை வெளியிடுவதில் திருப்தி அடைகின்றோம். மேலும், இந்நூலினைச் சிறப்பாக வெளிக்-கொணர உதவிய சேமமடு பதிப்பகத்தினருக்கும் எமது நன்றிகள். 

    கலாநிதி (திருமதி) ஏ. என். கிருஷ்ணவேணி  
    தலைவர்
    நுண்கலைத் துறை 
    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு 2017