Book Type (புத்தக வகை) : வரலாறு
Title (தலைப்பு) : இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-04-03-011
ISBN : 978-955-1857-10-3
EPABNo : EPAB/02/18557
Author Name (எழுதியவர் பெயர்) : ச.சத்தியசீலன் பேரா.ச.சத்தியசீலன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 180
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 540.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருடக்கம்

  1. இலங்கையில்; இனவாதமும் தேசக் கட்டுமானமும்
  2. யாழ்ப்பாண  இளைஞர் காங்கிரசும், ஹன்டி பேரின்பநாயகமும் ஒரு மீள் மதிப்பீடு
  3. இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் சில அவதானிப்புகள்
  4. இருபதாம் நூற்றாண்டுகால இலங்கையில் இந்து மதத்தின் வளர்ச்சிப் போக்குகள்
  5. பிரித்தானியர் கால நல்லூர் ஒரு நோக்கு
  6. மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகளும்
  7. இலங்கைத் தமிழர் குடிபெயர்வு மலாயக் குடிபெயர்வு மேற்குலகக் குடிபெயர்வு ஓர் ஒப்பீட்டாய்வு
  8. இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர்  இடையிலான உறவுகள்பற்றிய சில கருத்துகள்
  9. இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும்
Full Description (முழுவிபரம்):

'இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்' எனும் இந்நூல் பல்வேறு காலப்பகுதிகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவருகின்றது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் அதுவும் பெருமளவுக்கு நவீன காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்நூல் பேசுகின்றது. அவ்வாறான கருப்பொருட்களாக இலங்கையில் தேசக்கட்டுமானம், இலங்கைத் தமிழர் தேசியவாதம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், இருபதாம் நூற்றாண்டு இலங்கையில் இந்துமதத்தின் வளர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள், பிரித்தானியர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட ஈழத்தமிழரின்அடையாளங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் என்பன அமைந்துள்ளன. 
இலங்கைத் தமிழரின் வரலாற்று ஓட்டத்தினை அறிய விரும்பும் ஒருவருக்கு பயனுள்ள பல தகவல்களை வழங்குவனவாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பன்மைச் சமூகங்களைக் கொண்ட இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள சமூகமும் இதன் அரசியல் தலைவர்களும் தம் தனித்துவத்தை, அடையாளத்தை நாடு பூராவும் நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின் எதிர்ச் செயற்பாடுகளைக் காட்டுவனவாகவும் இவை அமைந்துள்ளன. அத்துடன், தேசக்கட்டுமானத்தை, தேச ஒருங்கிணைப்பை பெரும்பான்மை சமூகத்துள் சிறுபான்மை சமூகத்தவர் ஒன்றிணைந்து போதல் (யுளளiஅடையவழைn) என தவறாக பெரும்பான்மைச் சிங்கள, பௌத்த சமூகத்தவர் கருதி செயற்பட்டதனையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரைகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறான ஒரு நூலை வெளியிட வேண்டுமென்று ஆலோசனை வழங்கி, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுள் 'அகவிழி' ஆசிரியர் நண்பர் தெ.மதுசூதனனும் சேமமடு பொத்தகசாலை அதிபர் நண்பர் பத்மசீலனும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரின் இணைந்த ஆர்வமும், முயற்சியும்தான் இந்நூலின் வெளியீட்டிற்கு மூலகாரணம் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ச.சத்தியசீலன்
வரலாற்றுத் துறை 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி.