Full Description (முழுவிபரம்): |
தகவல் தொழிற்துறையை முதன்மையாகவும் தகவலைப் பிரதான மூலவளமாகவும் கொண்ட தகவல் தொழினுட்ப யுகமொன்றில் உலகின் வளர்ச்சியடைந்த சமூகங்களுடன் விரும்பி இணைந்து அல்லது இழுபட்டு ஓடுகின்ற நிர்ப்பந்தத்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கல்விசார் உறுப்பினர்கள் நூலகவியலின் முக்கியத்துவத்தை உணரக்கூடிய வாய்ப்பை மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நூலக தகவல் அறிவியல் என்னும் பொருட்துறை தவழும் பருவத்தில் நிற்கிறது என்பது அனை-வராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு உண்மை. ஈழத்து நூலகங்-களின் வரலாறு 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தான் தொடங்குகின்றது என்றால் தமிழில் நூலகவியல் துறையின் ஆரம்பம் 1975இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட இலங்கை நூலகச் சங்கத்தின் டிப்ளோமாக் கற்கைநெறியுடன் தான் ஆரம்-பிக்கின்றது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தமிழக நூலக வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்தாலும்கூட நூலகவியல் துறையின் வளர்ச்சியானது ஆங்கிலமொழிக்கு மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் தான் இன்றுவரை இருக்கிறது. கீழைத்தேய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர் இரங்கநாதன் என்ற தமிழ் அறிஞ-னின் அறிவூற்று அனைத்தும் கூட இன்றுவரை ஆங்கிலமொழி வடிவிலேயே உள்ளது என்பதுடன் தமிழ்மொழி மாணாக்கனைப் பொறுத்து அவை அவனுக்கு கிடைக்கக்கூடிய வகையில் முயற்சி-கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தவகையில் தாய்மொழியில் கல்வியைத் தொடரும் மாணாக்கனுக்கு உதவக்கூடிய ஒரு முயற்சியாகவே 'நூலக தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை' என்ற இந்நூலின் உருவாக்கம் அமைகிறது.
இக்கட்டுரைத் தொகுப்பின் உருவாக்கத்துக்கு பின்வருவன அடிப்படையாக அமைந்தன.
° ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற சமூகத்தின் தற்போதைய வளர்ச்சி நிலையை பதிவுசெய்ய வேண்டிய தேவை
° நூலகத் தகவல் விஞ்ஞானத்துறையின் புதிய போக்கினை இனங்கண்டு அவற்றில் எமது சமூகத்திற்குப் பொருத்த-மானவற்றை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம்
° குறித்த தகவல்களைத் தாய்மொழியில் வெளிக்கொணர வேண்டிய தேவை.
° ஆய்வை மேற்கொள்ளும் கால அளவுக்குச் சமமாக அதனை சமூகத்துக்கு எளிமைப்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை
° நூலகவியல் துறை சார் மாணவர்களது எதிர்பார்ப்புக்-களை பூர்த்தி செய்யவேண்டிய கடமைப்பாடு
இவை மட்டுமன்றி நூலகவியல் துறைக்குள் நூலகவியல் சார்ந்த அடிப்படை அறிவு எதுவுமற்ற மாணவியாக நுழைந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பயின்று பெற்ற கல்வி அறிவினதும்;, கல்விசார் நூலகமொன்றில் கல்விசார் நூலகராகப் பணியாற்றக் கிடைத்த கடந்த 20 வருட கால அனுபவங்களினதும் சாரமாக இதனைக் கருத இடமுண்டு. முழுக்க முழுக்க ஆய்வு முயற்சியி-லேயே முழுக்கவனத்தையும் செலுத்தக் கூடிய வகையிலான அறிவையும் பயிற்சியையும் வழங்கும் துறையாகக் கருதப்படத்தக்க ஆவணவாக்கத் துறையில் பயிற்சியளிக்கும் ஆவணவாக்கப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் முதுமாணியை நிறைவு செய்த பின்னரும் கூட ஆய்வை அப்படியே ஆய்வாக வெளிக்கொணர்வதில் பயனேதும் இல்லை என்ற யதார்த்தத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நூலகவியல் சமூகத்தின் தற்போதைய நிலைமை தான் இத்தகைய தொகுப்பின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
சமூகத் தேவையின் தன்மைக்கேற்ப வடிவமைப்பில் ஆய்வுக் கட்டுரை, சிறப்புக்கட்டுரை, பொதுக்கட்டுரை, கருத்தரங்கக்கட்டுரை எனப் பல்வேறு வகை சார்ந்தவையாக உள்ளபோதும் உள்ளடக்க நோக்கில் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் அறிவு நிலை நின்று ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்டவை. தொடர்ச்சியாக நிகழும் ஆய்வுச் செயன்முறையானது புதிய கருத்துநிலைகளை உருவாக்கும் அதேசமயம் முன்னைய கருத்துநிலைகளைப் பலப்-படுத்தும் இருநிலை நகர்வினை உடையதாகும். இந்நகர்வில் நூலக மற்றும் தகவல் அறிவியல்துறை சார்ந்த முன்னைய ஆய்வு முடிவு-களை மட்டுமன்றி சமூகத்தின் தற்போதைய நிலைமைகள், தேவை-கள், பொறுப்புக்கள் என்பவற்றையும் வெளிக்கொணரும் வகையில் அமையும் இக்கட்டுரைத் தொகுப்பானது புத்தாய்வுக்கான நுழை-வாயிலாக மட்டுமன்றி, தேவையான தூண்டலை வழங்கவல்ல கட்டுரைகளின் தேட்டமாகவும் அமைகிறது.
நூலகவியல் சமூகமானது தன்னை நிலைநிறுத்திக் கொள்-வதற்குத் தேவையான அடிப்படை அறிவு அவர்களுக்கு புரியக்கூடிய மொழியில் போதுமானளவிற்கு பதியப்பட்டுவிட்டது. எனவே இனி-வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்க முயற்சிகள் அனைத்-தும் முழுக்க முழுக்க ஆய்வு முயற்சிகளாகவே இருக்கவேண்டும் என்ற தேவையை புதிய ஆய்வாளர்களுக்கு வலியுறுத்துவனவாகவும் இக்கட்டுரைத் தொகுப்பைக் கருத இடமுண்டு.
இக்கட்டுரைத் தொகுப்பானது காலத்தின் தேவை என்பதை உய்த்துணர்ந்து . நூல் வடிவில் இதனை வெளிக்கொணர முன்னின்று உழைத்த அகவிழி ஆசிரியர் திரு.மதுசூதனன் அவர்களுக்கு நூலகவியல் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.
ஸ்ரீகாந்தலட்சுமி,அ
|