யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும் |
பெண் இனம் அனுபவிக்கும் அதிகளவான உரிமைகள் பலவகையான போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட வையே. பெண் இனத்தின் செயற்பாடுகள் பொதுவாக ஒரு சமூகத்தி னால் பின்பற்றப்பட்டு வருகின்ற கலாசாரம், சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள், சமூக விழுமியங்கள் போன்ற பல கூறுகளால் சூழப்பட்டுக் கட்டுப்பாடுகளுடனேயே இடம்பெற் றுள்ளன. இந்தவகையிலே கல்வி கற்கும் உரிமைக்காகவும் பெண்கள் பல தடைகளைத் தாண்ட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டமையை வரலாற்று ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. |