Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசார் பல்கலாசார ஆலோசகராகவும் அவர் ஆற்றிய பணிகள் எவராலும் மறக்கமுடியாதவை. கனடாவில் தமிழ்க் கல்விக்கான பாடநெறித் தலைவராக இயங்கிய பொழுது அவரது முயற்சியின் பலனாகவே பல பாடசாலைகளிற் தமிழ் போதிப்பதற்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகம் புகுவதற்கான ஒரு பாடநெறியாகத் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றமை அவரது முயற்;சியின் பெறுபேறு.
              கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தீவிரமாக எழுத்துத் துறையில் இறங்கிய அவரது படைப்புக்கள் அவருள் ஒளிந்திருந்த எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்தன. பெரும்பாலும்  கல்வியையே மூலதனமாகக் கொண்டது ஈழத்தமிழ்ச் சமூகம். அதன்வழி அச்சமூகம்  அடைந்த வெற்றி இலகுபாதையிற் கிடைத்த ஒன்றல்ல. எண்ணற்ற கல்வியாளர்களது அர்ப்பணிப்பின விளைச்சலே அது. அவர்களின் முன்னோடிகளாய் அடையாளம் காட்டக்கூடிய சிலரது அர்ப்பணிப்புக்களை விபரிககிறது இந்நூல். சமூக முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு தீவிரமாய் உழைத்த கல்வியாளர் சிலர் பற்றிய இந்நூல் அவரது கல்விப் பணிக்கும் எழுத்தாற்றலுக்கும் ஒரே சமயத்தில் மகுடமாய் அமைகிறது. இந்த முன்னோடிகள் வரிசையில் நூலாசிரியருக்கும் ஓர இடம் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடல் தகும்.

 

பொ.கனகசபாபதி புத்தகங்கள்
2012 - தொகுப்பு - எம்மை வாழ வைத்தவர்கள்
2019 - விஞ்ஞானக் கட்டுரைகள் - திறவுகோல்