புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மாயை பற்றிய கருத்தும் சங்கரர் வேதாந்த காட்சியும்

இந்து தத்துவ சிந்தனை மரபில் உண்மையைக் கண்டறியும் முயற்சி பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. வள்ளுவப் பெருந்தகையின்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (குறள் 355)
என்ற வாக்கிற்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களாகிய பல்கலைக் கழகங்களில் இத்துறை சார்ந்த ஆய்வு முயற்சிகள் பல்வேறு கோணங்களிலும் பரிமாணங்களிலும் நடந்தேறி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். அவ்வகையில் பேராசிரியர் நா.ஞானகுமாரனின் மாயை பற்றியதும் வேதாந்தம் பற்றியதுமான இந்நூல் வெளி வருவதையிட்டு முதற்கண் எனது பாராட்டுக்களையும் நல்லாசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வேதாந்த மாயை தொடர்பான  சில மயக்கங்களை நீக்கி அது பற்றிய அறிவையும் வேதாந்தக் காட்சி தொடர்பான விளக்கத்தையும் ஆய்வு நோக்கிலும் ஏனைய கோட்பாடுகளோடு ஒப்பிட்டுத் தெளிவுபடுத்தும் வகையிலும் இந்நூல் அமைவதை அவதானிக்க முடிகின்றது. இந்து தத்துவச் சிந்தனைகளின் மூலமாகிய வேத உபநிடதங்கள் தரும் சிந்தனைகள் காலம்தோறும் பல்வேறு சிந்தனை மரபுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் ஆதார சுருதியாக அமைந்துள்ளன. தத்துவ ஞானிகள் தாம் பெற்றுக்கொண்ட அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிந்தனைத் திறனுக்கும் ஏற்ப உண்மைப் பொருள் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைத் தர முயன்றாலும் அவை அனைத்தும் வேதம் போற்றிய சத்தியமான உண்மைப் பொருள் தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைத் தர முயன்றாலும் அவை அனைத்தும் வேதம் போற்றிய சத்தியமான உண்மைப் பொருளை அறியும் முயற்சியாகவே அமைகின்றன. 'ஏகம் சத் விப்ரா: பகுதா வதந்தி' என்ற இருக்கு வேத வாக்கு &


சிவகுமார் நிரோசன்
Mr.Niroshan

சிவகுமார் நிரோசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினை முதற்தரத்தில் பெற்றுக்கொண்டதோடு, அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணி ஆய்வினையும் மேற்கொண்டு வருகின்றார்.  இவர் மெய்யியற் பிரச்சினைகள் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன், பல்கலைக்கழகங்களில் நிகழும் சர்வதேச ஆய்வரங்குகளிலும் கலந்து, பல ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.  மெய்யியலைக் கற்கும் மாணவர்களுக்கு  இந்நூல்  சிறந்த வழிகாட்டியாக அமையும்.