Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : ஆய்வு முறையியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2013-03-01-121
ISBN : 97-895-568-502-08
EPABNo : EPAB/2/19278
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2013
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 94
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பகுதி -1
1.     ஆய்வு அறிமுகம்    01
2.     வரலாற்றியல் ஆய்வு    14    
3.     ஒப்பியல் ஆய்வு    18    
4.     விபரண ஆய்வு    20
5.     தனியாள் ஆய்வு    22
6.     செயற்றொகுதி ஆய்வு    23
7.     புள்ளிவிபரவியல் ஆய்வு    24
8.     மாதிரி எடுப்புமுறை    34
9.      நிகழ்தகவு முறை    37
10.     புள்ளிவிபரவியல் ஆய்வு    39
11.     பரிசோதனை ஆய்வு    42
12.     விபரணப் புள்ளிவிபரவியலும் அனுமானப்             புள்ளி விபரவியலும்    46    
13.     செயல்நிலை ஆய்வு    50
பகுதி -2
1.     ஆய்வுமுறையியலிற் பண்புசார் ஆய்வுகள்    52
2.     சமூக ஆய்வுகள்     61
3.     இனவரைபியல் ஆய்வுகள்    66
4.     இலக்கிய மீளாய்வு    71
5.     கலைச்சொற்கள்     79

 

Full Description (முழுவிபரம்):
 
சமகாலத்தில் ஆய்வு முறைமை என்பது தனிப்பெரும் துறையாகப் புலமை உலகில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆய்வியலை தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியை பல்வேறு ஆய்வாளர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
 
பொதுவாக ஆய்வு என்பது கேள்வியின் அடிப்படையில்தான் தொடங்குகிறது. கேள்விகள்தான் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை. பெரும்பான்மையான கேள்விகளுக்கு தகவல்களின் அடிப்படையில் விடைகாண இயலாது. பல கேள்விகளுக்கான விடைகள் சிந்தனைகளாகின்றன. சிந்தனைகள் தனிமனித மேம்பாடு, சமூக மேம்பாடு, சமயச் சீர்திருத்தம் மற்றும் அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எல்லாச் சிந்தனைகளும் ஆராய்ச்சியாகிவிடாது. சிந்தனைகள் ஆய்வுக்கு அடிப்படை ஆகலாம்.
 
ஆய்வின் முக்கிய நோக்கமே அறிவுப் பரப்பில் ஒரு செயற்கையாக அமையக் கூடிய புதிய பொருளை அறிவதே ஆகும். ஆய்வு என்பது தேடுதலாக அமையும் பொழுது அதன் விளைவு புதிய கண்டுபிடிப்பாகஇருக்க வேண்டும். இத்தகைய கண்டுபிடிப்பு ஏற்கெனவே உள்ள அறிவுப் பரப்பில் புதிய பரிமாணமாக அமைய வேண்டும். இவ்வாறு அமைய ஆய்வாளரின் உண்மையைத் தேடும் இயல்பும் நுண்பார்வையும் மிக அவசியம். ஆகவே ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய முடிவுகளையும் வெளிப்படுத்தவேண்டும். முன்னர் கண்டறிந்த முடிவுகளையே திரும்பக் கூறுவதோ விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாக அமையாது. முன்னர் தெரிந்த செய்தியோடு தெரியாத ஒன்றை சேர்ப்பதுதான் அறிவுப் பெருக்கத்திற்கு அல்லது அறிவு விரிவாக்கத்திற்கு உதவும். ஆய்வு என்பது ஒரு கிளர்ச்சியான முழு மன நிறைவுடைய அறிவு சார்ந்த செயற்பாடாக அமைய வேண்டும்.
 
ஒரு மொழியின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கு அந்த மொழியில் நிகழ்த்தப்படும் திட்பநுட்பமான ஆய்வுகளும் சுட்டிகளாக விளங்குகின்றன. ஆழமான ஆய்வுகளை தமிழில் மேற்கொள்வதற்கு ஆய்வியல் பற்றிய நூல்கள் அடிப்படையானவை. ஆய்வு முறையியல் எனும் நூலானது நவீன ஆய்வியலை தமிழுக்கு
அறிமுகப்படுத்தும் அடிப்படை நூலாகவும் வழிகாட்டி நூலாகவும் ஆக்கம் பெற்றுள்ளது. 
 
இந்நூலின் முதலாம் பகுதியில் அத்தகைய ஆற்றுப்படுத்தலே இடம்பெற்றுள்ளது. நூலின் இரண்டாம்பகுதி ஆய்வின் வளர்ச்சியோடு தொடர்புடைய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவ்வகை அமைப்புடைய நூலொன்று தமிழில் வெளிருதல் குறிப்பிடத்தக்கது. ஆய்வு பற்றிய ஆய்வு கட்டுரைகள்எழுதும் மரபு தமிழில் இன்னமும் உருவாகி வளர்ச்சியடையவில்லை. இந்நூலின் இரண்டாம் பகுதி அத்தகைய ஒரு செயல்முனைப்பை வெளிப்படுத்தி உள்ளது. பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் கல்வி நிலையங்களிலும் ஆய்வியல் என்பது ஒரு தனிப்பாடமாக வளர்ச்சியுற்றுவரும் இக்காலத்தில் இத்தகைய நூல்களின் தேவை மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இந்நூல் வெளிக்கொணரப்படுவது சாலப் பொருத்தமானது. 
 
ஆய்வுகள் திட்பமாகவும் செப்பமாகவும் நிகழ ஆய்வியல் பற்றிய அறிவு அடிப்படையாகின்றது. அந்த அறிவுத் தளத்தை தமிழில் வளர்க்கும் முயற்சியை இந்நூல் முன்னெடுக்கின்றது.
 
தெ.மதுசூதனன்