புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலக்கியத் தென்றல்

தமிழ் இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளை விளக்க எழுந்தநூல் இலக்கியத்தென்றல். ஒரு மொழியிலுள்ள நூல்களின் தோற்றத்தையும் தன்மையினையும் இலக்கிய வளர்ச்சியினையும் காலவரையறைப்படுத்தி வகுத்துக்கூறுவன, இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம், விசயநகர நாயக்க மன்னர்காலம், ஐரோப்பியர் காலம், இக்காலமென ஏழு பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு காலப்பகுதியின் அரசியல்நிலை, அக்காலப்பகுதியிலே தோன்றிய நூல்கள், அவற்றின் பண்பு முதலியனவற்றை ஒழுங்குபெற எடுத்துக்கூறுகின்றது. இந்நூலிலுள்ள இலக்கியப் பரப்பு என்னும் முதற்பகுதி.
தமிழிலே முதன்முதல் இலக்கண நூல் இயற்றியவர் அகத்தியர் என்பர். தமிழ்இலக்கண நூல்கள் என்னும் பகுதி இம்மரபு ஆராய்ச்சிக்கு முரண்பட்டதென்றும், தொல்காப்பியமே இப்பொழுது கிடைத்துள்ள பழம் இலக்கண நூலென்றும் சான்றுகாட்டி நிறுவுகின்றது. தொல்காப்பியத்துக்குப் பின் இன்றுவரையுள்ள காலப்பகுதியில் தோன்றிய இலக்கண நூல்களின் வரலாற்றினையும் காலவரையறுத்து இப்பகுதி கூறுகின்றது. 
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியன ஐம்பெருங் காப்பியங்கள் என்பர். பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களைத் தந்து சீவகசிந்தாமணியே பெருங்காப்பிய இலக்கணம் அமைய இயற்றப்பெற்ற நூல் என்பதனை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற பகுதி விளக்குகின்றது. 
தமிழகத்திற் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும் பல. அவை யாவும் தமிழ் மொழியைப்பேணி வளர்த்தன. சைவரும் வைணவரும் சமணரும் பௌத்தரும் கிறித்தவரும் தமிழ்த்தாய்க்கு


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம