அரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் |
அரசியல் மற்றும் சமூக அமைதி, உறுதிப்பாடு மற்றும் பாது காப்பு என்பவற்றுக்கிடையில் நிலவும் நித்தியமான தொடர்பின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு முன்னொருபோதும் இல்லாத ளவுக்கு இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணி யில் அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தைப் பற்றிக் கற்பதில் ஒரு புத்தெழுச்சி எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று அரசியல் விஞ்ஞானத்தின் மூலத்துவங்கள் பற்றிய கற்கை க.பொ.த (உ.த) வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் வேரூன்றி வருகின்றது. எமது நாட்டின் பிரதான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசியல் விஞ்ஞானத் தோடு தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை தமது பாட விதானத் துக்குள் சேர்த்துள்ளன. பட்டப்படிப்பினை வெளிவாரியாகத் தொடரும் பட்டதாரி மாணவர்களுள் அதிக எண்ணிக்கையினர் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்துள்ளனர். இப்பாடத்தை முறைசார் முறையில் கற்காத சாதாரண மக்கள் மத்தியிலும் அரசியல் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இவ்ஈடுபாட்டை புதினத்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளினூடாகவும், கலந்துரையாடல்கள் மற்றும் கருத் தரங்குகளினூடாகவும், விரிவுரைகள் மற்றும் உரைகளினூடாகவும் இக்காலப் பகுதியில் இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காணமுடிகிறது. |